For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவிதையின் பால்வீதிக்கு அழைத்துச் சென்றவர் கவிக்கோ… சீமான் புகழாரம்

கவிதையின் பால்வீதியில் நம்மைத் தன் எழுத்துக்களால் கூட்டிசென்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவு தமிழ்ப்படைப்புலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்ற சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னை அருகேயுள்ள பனையூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிலேடை மொழி

சிலேடை மொழி

எளிய நடையும், சிலேடை மொழியும் கொண்டு கூரியக் கருத்துகளும், சீரிய திறனும், மிகுந்து நெஞ்சுரத்தோடு சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் அமுதப் பாக்களை அழகுத்தமிழில் அள்ளித் தந்திட்டப் வானம்பாடி கவிதை மரபின் தனித்துவமான மூத்த படைப்பாளி பெருங்கவிஞர் ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவுச்செய்தியானது மிகுந்த மனவேதனையையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தருகிறது.

பாக்களின் போர் வீரர்

பாக்களின் போர் வீரர்

அவரை இழந்துவிடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் அவர்களது குடும்பத்துயரில் நானும் பங்கேற்கிறேன். கவிதைக்குப் பொய்யழகு என்ற இலக்கணத்தைத் தகர்த்து உண்மையை நெஞ்சுரத்தோடு உலகறியச் செய்யத் தனது தனது பாக்களின் மூலம் போர்தொடுத்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

புதுக் கவிதை வித்தகன்

புதுக் கவிதை வித்தகன்

பெரும்பான்மைச் சமூகம் கொண்டிருக்கிறக் கருத்தோட்டமாக இருந்தாலும், அதனைச் சாடி முற்போக்கு முத்துகளை விதைக்கிற பாங்கினைத் தனது கவிதைகள் மூலம் தந்தவர். தம் கவிபாடும் வல்லமையாலும், தனித்திறனாலும் புதுக்கவிதைத் துறையில் புதுமையில் புகுத்தி நவீன இளைய தலைமுறையினரின் நெஞ்சம் ஈர்த்த இப்பெருங்கவிஞனின் இழப்பு என்பது தமிழ் படைப்புலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்!

பால்வீதிப் புலவன்

பால்வீதிப் புலவன்

‘பால்வீதி' கவிதைத்தொகுப்பின் மூலம் தன்னைத் தலைசிறந்த படைப்பாளியாக நிலைநிறுத்திக் கொண்ட கவிக்கோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்தாலும் அவரது சீரிய பாக்கள் மூலம் தமிழ் படைப்புலகில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார். தமிழ் இலக்கிய உலகை ஆண்டுக் கொண்டுதானிருப்பார். கடைசி வரை கொள்கை உறுதியுடன் வாழ்ந்து மறைந்த படைப்பாளிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Naam Thamizhar leader Seeman tributed the great poet Kaviko Abdul Rahman, who died in early morning today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X