For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்வை நோக்கிய முயற்சியும் பயிற்சியும் .. கருத்தரங்கம்

Google Oneindia Tamil News

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்,காரைக்குடி பெர்ல் சங்கமம் சங்கம் சார்பில் 1௦ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு,"தேர்வை நோக்கிய முயற்சியும் பயிற்சியும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக் கருத்தரங்கத்திற்கு காரைக்குடி ரோட்டரி சங்கம் துணை ஆளுநர் முத்துக்குமார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

Seminar for 10th students

காரைக்குடி பெர்ல் சங்கமம் பயிற்சியாளர் முத்துக்குமார் அவர்கள், வாழ்த்துரையின் போது பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூபாய். 10,000 வழங்குவதாகவும், மேலும் உயர் படிப்பிற்கு உதவி செய்வதாகவும் கூறி ஊக்கப்படுத்தினார்.

Seminar for 10th students

இக்கருத்தரங்கத்தில் பயிற்சியாளர் தேவராஜன் அவர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையின் அவசியம் குறித்தும், தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், பயிற்சியளித்தார்.

Seminar for 10th students

மேலும் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயம் நீங்கவும், மனநல ஆலோசனைகளையும், படித்ததை நினைவு கொள்ளும் யுத்தியைப்பற்றியும், நேர மேலாண்மை குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

Seminar for 10th students

நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. ஜாக்குலின் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் கீதா சுந்தரேஸ்வரி, விஜயகாந்தி செய்திருந்தார்கள்.

Seminar for 10th students

English summary
A Seminar for 10th students held in Karaikudi Ramanathan Chettiyar municipal school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X