For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கோட்டை - நியூ ஆரியங்காவு அகல ரயில் பாதை நாளை முதல் திறப்பு

Google Oneindia Tamil News

தென்காசி: செங்கோட்டை - நியூ ஆரியங்காவு அகல ரயில் பாதை நாளை முதல் திறக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சிலம்பு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யபப்டுகிறது.

செங்கோட்டை-புனலூர் இடையே 49.5 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இதனால் இம்மார்க்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Sengottai-Aryankavu new railway line from tomorrow

இதையடுத்து நடந்துவந்த அகல ரயில் பாதை திட்டப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதையின் இறுதிக்கட்ட ஆய்வை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து நியூஆரியங்காவு ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு, நடை மேடை, இருக்கை வசதிகள், வர்ணம் பூச்சு பணிகள் துரிதமாக நடைபெற்று முடிந்தது. இந்த பாதையில் நியூ அரியங்காவு, எட்மன், புனலூர் இடையே முடிந்துள்ள பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தனர். இதையடுத்து மார்ச் மாதத்தில் அந்த தடத்தில் ரயில் சேவை துவங்கும் என ரயில்வேத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி செங்கோட்டை முதல் நியூ ஆரியங்காவு இடையே அகல ரயில் பாதை நாளை முதல் திறக்கப்படுகிறது. இதனை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து தொடங்கி வைக்கிறார். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிடுகிறார்.

English summary
railway lines between Sengottai-Aryankavu open from tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X