For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை.. செங்கோட்டையன் 'வார்னிங்'!

கூடுதல் கட்டணம் வலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஈரோடு: கூடுதல் கட்டணம் வலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் கட்டணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Sengottaiyan has issued a warning to the private schools for additional charges

வழக்கமாக ஜுன் 1, 2ஆம் தேதிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் வெயில் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

மேலும் கூடுதல் கட்டணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க ஆன்லைனில் விண்ணப்பம் முறை கடைபிடிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

English summary
School Education Minister Sengottaiyan has issued a warning to the private schools for additional charges. He added that the committee will be monitored by a retired judge in relation to additional fees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X