For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க குமரி அனந்தன் முயற்சி- கைது செய்த போலீஸ்

தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

தருமபுரி : தருமபுரியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நதிகள் இணைப்பு, மது ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியறுத்தியம். பாரத மாதா திருக்கோவிலை கட்டிட வலியறுத்தியும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் பாத யாத்திரை மேற்கொண்டார். சென்னையில் தொடங்கி கடந்த 21 நாட்களாக நடைபெற்ற பாதயாத்திரை இன்று தருமபுரி வந்தடைந்தது.

Senior congress leader Kumari anandan arrested near Dharmapuri

பாப்பாரப்பட்டியில் குமரி அனந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி அனந்தன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த வழக்கும் இன்றி அவரை விடுவிக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குமரிஅனந்தனை விடுவிக்காவிட்டால் நாளை காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மூத்தத் தலைவர் குமரி அனந்தனின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Senior congress leader Kumari anandan arrested near Dharmapuri for trying to do a indefinite hunger strike and Tn congress president Thirunavukkarasar urges his release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X