For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏய்.. வா வா.. நல்லா படி சரியா.. ஓகேக்கா.. வெட்க சிரிப்புடன் நுழைந்த ரோஜாப் பூக்கள்!

புதிய மாணவர்களை மூத்த மாணவர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    வெட்க சிரிப்புடன் நுழைந்த ரோஜாப் பூக்கள்!

    தேவகோட்டை: ம்ஹூம்.. நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அழுது பிடிப்பதுதான் குழந்தைகளின் இயல்பு.. ஆனால் தேவகோட்டை மாணவர்கள் அப்படி இல்லை.. இன்று முதன்முதலாக ஆர்வத்துடன் படிக்க வந்த புதிய மாணவர்களை, மூத்த மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்று இருக்கிறார்கள்!

    தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் எப்பவுமே வித்தியாசமானவர்கள்.. சமூக அக்கறை நிறைந்தவர்கள்... உதவும் எண்ணங்களை இப்போதே மனதில் விதைத்து கொண்டவர்கள்.

    அதனால்தான் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதில் தங்கள் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும் என்று களத்தில் குதிப்பவர்கள்.

    லெ.சொக்கலிங்கம்

    லெ.சொக்கலிங்கம்

    அப்படித்தான் கஜா புயல், கேரள புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக அரசி மூட்டைகளை அனுப்பினார்கள். உண்டியலில் காசு சேர்த்து நிதி தந்தார்கள். இதற்கெல்லாம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்தான்.

    இன்று திறப்பு

    இன்று திறப்பு

    அதனால் அடிக்கடி இந்த பள்ளியின் பெயர் உச்சரிக்கப்பட்டே இருக்கும். தமிழகம் முழுவதும்இத்தனை நாள் ஸ்கூல் லீவு விட்டுட்டு இன்னைக்குதான் திறக்கப்பட்டது. அதன்படி தேவகோட்டை பள்ளியும் வழக்கம்போல திறக்கப்பட, பள்ளி மாணவர்கள் புது யூனிபார்மில் துள்ளி குதித்து ஓடிவந்தார்கள்.

    ரோஜாப்பூ

    ரோஜாப்பூ

    அதேபோல, இந்த ஸ்கூலுக்கு புதிய மாணவர்களும் சேர்ந்துள்ளனர். எல்லாருமே மழலைகள்தான். அவர்களுக்கு மற்ற மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். இவர்களுடன் சொக்கலிங்கமும் சேர்ந்து கொண்டார்.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    மூத்த மாணவர்கள், தலைமை ஆசிரியர், மற்ற டீச்சர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுக்கு பூ கொடுப்பதை பார்த்ததும் புது மழலைகள் வெட்கப்பட்டு சிரித்தனர். இதை பார்த்தது அவர்களின் பெற்றோரும் பூரித்தனர். எல்லாத்திலயுமே இந்த ஸ்கூல் படு வித்தியாசம்தான்!

    English summary
    In Chairman Manickavasagam School, Senior students welcomed new students in Devakottai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X