• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீச்சட்டி எடுத்தும், கோவிலில் உருண்டும்... செந்தில் பாலாஜியை கைவிட்டுட்டாரே கடவுள்!

By Mayura Akilan
|

சென்னை: மாரியம்மனுக்கு தீச்சட்டி, இளநீர் காவடி எடுத்து... உருண்டு, புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்தும் எந்தப்பலனும் இல்லாமல் போய்விட்டது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு. திடீரென்று அமைச்சரவையில் இருந்தும் கட்சிப்பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

கரூர் மாவட்ட அதிமுகவில் சர்வாதிகாரியாக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட நால்வர் அணியுடன் நெருக்கம் காட்டினார். ஆனாலும் அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
2013ம் ஆண்டு நில அபகரிப்புப் புகாரில் சிக்கினார். இது குறித்த சட்டமன்றத்திலேயே திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனாலும் ஏறுமுகமாகவே இருந்து வந்தார். செந்தில் பாலாஜி. அதிமுகவில் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த செந்தில் பாலாஜியின் பின்னணி என்ன தெரிந்து கொள்ளுங்களேன்.

திமுக டூ அதிமுக

திமுக டூ அதிமுக

கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி, செந்தில்பாலாஜியின் சொந்த ஊர். கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு அரசியலில் ஈடுபட்டார். 1996ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.

செந்திலுடன் இணைந்த பாலாஜி

செந்திலுடன் இணைந்த பாலாஜி

'வி.செந்தில்குமார்' என்ற இயற்பெயரை 'வி.செந்தில்பாலாஜி' என நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டார். தி.மு.க இருந்தபோது அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. 2000ம் ஆண்டில் அ.தி.மு.கவில் இணைந்தார்.அ.தி.மு.கவில் சேர்ந்த ஆறே மாதங்களில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர். 2004ம் ஆண்டு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர். 2006ல் எம்.எல்.ஏ சீட், 2007 ல் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆக அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றார்.

ஒதுக்கிய செந்தில் பாலாஜி

ஒதுக்கிய செந்தில் பாலாஜி

கரூரில் அதிமுகவில் அதிகார மையமாக வலம் வந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமி, தி.மு.கவுக்குத் தாவியதும் கூட செந்தில் பாலாஜியின் கைங்கர்யத்தினால்தானாம். மாவட்டத்தில் தனக்குப் போட்டியாக மாவட்டத்தில் யாரும் தலைதூக்கிவிடக் கூடாது என செந்தில்பாலாஜி ரொம்ப உஷாராகவே இருந்தார். ஜெயலலிதாவிடம் செல்வாக்கு படைத்தவராக இருந்த தம்பிதுரையே இவரது குடைச்சலுக்கு ஆளானதாக தலைமைக்கு புகார் போனது.

நில அபகரிப்பு புகார்

நில அபகரிப்பு புகார்

செந்தில்பாலாஜி மீது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நில அபகரிப்பு புகார் கிளம்பியது. 'நிலத்தை அபகரிக்க என்னை மிரட்டினார்' என செந்தில்பாலாஜிக்கு எதிராக புகார் கிளப்பினார்கள் கரூரைச் சேர்ந்த தெய்வானையும் அவரது மகன் கோகுலும். செந்தில்பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்கும் கடத்திவைத்து அடித்து உதைத்து சொத்துக்களை அபகரித்து விட்டதாகச் சொல்லி கரூர் போலீஸில் புகார் கொடுத்தார் கோகுல். அதோடு கரூர் நீதி மன்றத்தில் 164ம் பிரிவில் ஒப்புதல் வாக்குமூலம் வேறு கொடுத்தார். செந்தில்பாலாஜிக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடைசியில் புகார் மனு தள்ளுபடி ஆனது. இப்போது கோகுல் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

தற்கொலை வழக்கு

தற்கொலை வழக்கு

இதேபோல செந்தில் பாலாஜியின் சித்தி மகளைத் திருமணம் செய்த கோகுல் என்பவர் செந்தில்பாலாஜியின் அரசியல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர். அமைச்சரான பின்னரும் அனைத்து அரசியல் வேலைகளையும் கோகுல்தான் செய்து முடிப்பாராம். செந்தில்பாலாஜிக்குப் பக்கபலமாக இருந்த கோகுல், திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து போய் தி.மு.கவில் சேர்ந்தார் சில மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டார். இதற்குக் காரணம் செந்தில்பாலாஜிதான் என்ற புகார் எழுந்தது.

குட்புக்கில் லைக்ஸ்

குட்புக்கில் லைக்ஸ்

ஸ்மால் பஸ், அம்மா குடிநீர் அனைத்திலும் இரட்டை இலையை புகுத்தி ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்தார். இதனாலேயே பலவித புகார்கள் கார்டனுக்கு போனாலும் கட்டம் கட்டப்படாமல் தப்பித்தே வந்தார் செந்தில் பாலாஜி.

மொட்டை போட்ட செந்தில்

மொட்டை போட்ட செந்தில்

ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது தீபாவளி சமயத்தில் திருப்பதிக்கு சென்று ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாக மொட்டை போட்டு திரும்பினார். ஜெயலலிதா மீண்டும் முதல்வரான உடன் அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜி, மீண்டும் கரூர் மாரியம்மன் திருவிழாவில் பிரம்மாண்ட ஊர்வலத்தோடு போய் மொட்டை போட்டதோடு தீச்சட்டியும் ஏந்தினார்.

சாமியாராக மாறிய செந்தில்

சாமியாராக மாறிய செந்தில்

கரூர் மாரியம்மனுக்கு தீச்சட்டி ஏந்தினார். அது மட்டுமல்லாது இளநீர் காவடி எடுத்து அங்கப்பிரதட்சணமும் செய்து அசத்தினார். அடுத்தடுத்து கோவில் வழிபாடு, சிறப்பு பூஜை, யாகம், ரத்ததானம், காவடி தூக்குதல், அக்னி சட்டி எடுத்தல், பிரமாண்ட விளக்கு பூஜை என அடுத்தடுத்து செய்து வந்த செந்தில் பாலாஜி, தாடி வளர்த்து முழு சாமியாரைப்போல் காட்சியளித்தார்.

தீபம் ஏற்றி அமர்களம்

தீபம் ஏற்றி அமர்களம்

கரூரில் உள்ள முக்கியமான திருக்கோவில், ஆநிலையப்பர் கோவில் என அழைக்கப்படும் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலாகும். முசுகுந்த சக்ரவர்த்தி காலப்புகழ் பெற்ற இந்த கோயிலானது புகழ்சோழர் காலத்தில் இருந்து சிறப்பு வாய்ந்தது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்தநாயனார் அவர்கள் சிவனை வணங்கும் சிவபக்தர்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் மலு என்ற கொடாரி கொண்டு தட்டிக்கேட்பவரும் ஆவார்.

சிவனடியார்கள் வேதனை

சிவனடியார்கள் வேதனை

ஜெயலலிதாவை காப்பாற்றுவதாக கூறி லலிதா திருட்சதை ஹோமம் என்னும் 1 லட்சத்து 8 எண்ணை தீபங்கள் ஏற்றப்பட்டது. முழுக்க முழுக்க போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அம்மா என்ற பெயரிலே பல பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது இந்த சம்பவம் அங்கு வந்த பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் எல்லோரும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்க, அமைச்சர் செந்தில் பாலாஜியோ, தலையில் அதிமுகவின் இரட்டை இலை பல்பு மாட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

புதிய பேருந்துகள்

புதிய பேருந்துகள்

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்து அவர் கைகளால் தொடங்கிவைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை போக்குவரத்துக் கழகங்களுக்கு வாங்கப்பட்ட 260 புதிய பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டன. மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னரே அவற்றை தொடங்கிவைத்தார் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிவின் குட்புக்கில் இடம்பெற வேண்டியும், கவனத்தை கவரவும் பல்வேறு செயல்களை செய்து வந்தார் செந்தில் பாலாஜி.

பலன் இல்லாம போச்சே

பலன் இல்லாம போச்சே

இப்படி கோவில் கோவிலாக ஏறி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றிய செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் உலாவந்தன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. ஆனால் திடீரென்று இப்படி கட்சிப்பதவி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியாமல் அதிமுகவினர் சற்றே குழம்பித்தான் போயிருக்கின்றனர்.

English summary
Sacked Minister Senthil Balaji was doing all those things to lure CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X