For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையை விமர்சித்து கைதான நடிகை நிலானிக்கு ஜாமீன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையை போலீஸ் சீருடையில் விமர்சித்து கைதான நடிகை நிலானிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவல்துறையை விமர்சித்து கைதான நடிகை நிலானிக்கு ஜாமீன்- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையை போலீஸ் சீருடையில் விமர்சித்து கைதான நடிகை நிலானிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    Serial actress Nilani released on bail

    இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    அப்போது சீரியல் நடிகையான நிலானி போலீஸ் சீருடையில் போலீசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். போலீஸ் சீருடையை அணியவே உடம்பு கூசுவதாக கூறியிருந்தார் நிலானி.

    இதுகுறித்து பாஜகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நிலானி கடந்த 20ஆம் தேதி குன்னூரில் கைது செய்யப்பட்டார்.

    குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை சென்னை வடபழனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.பின்னர் நிலானியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    நிலானியை ஜூலை மாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை நிலானி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    English summary
    Serial actress Nilani has been released on bail. Nila was arrested on19th on the case of criticizing police in the police uniform about Tuticorin gun fire incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X