For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுடன் சேதுராமன், ஜான்பாண்டியன், தமிமுன் அன்சாரி, பூவை மூர்த்தி சந்திப்பு- அதிமுகவுக்கு ஆதரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியும் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டி உறுதியாகியுள்ளது. ஆளும் அதிமுக சிறு சிறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

Sethuraman and John Pandian meets Jayalalitha extends support

திமுக உடன் காங்கிரஸ் கட்சியும், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட சிறு சிறு கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை, மார்ச்.13ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்,அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஜி. தேவராஜன், மாநில செயலாளர் பி.வி. கதிரவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகிய 7 கட்சிகளின் தலைவர்கள், ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இக்கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இன்னமும் முடிவாகவில்லை.

அதிமுக நேர்காணல்

அதிமுகவில் நேர்காணலை முடித்து விட்டு தொகுதிப்பங்கீடு பற்றி ஜெயலலிதா பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் 23ம் தேதி சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் ஜெயலலிதா உடன் பேசினார். இதன் மூலம் அதிமுக கூட்டணியில் சமகவும் இணைந்தது.

7 கட்சிகள் ஆதரவு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் அது பற்றி அதிமுக வட்டாரம் எந்த ஒரு உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே இன்று மேலும் சில கட்சிகள் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Sethuraman and John Pandian meets Jayalalitha extends support

அதிமுகவிற்கு ஆதரவு

இன்று மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில், அவைத்தலைவர் நாசிர் உமரி, பொருளாளர் ஹரூன் ரசித், தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலா, முகமது நாசர், துணைப் பொதுச்செயலாளர்கள் முகமது மைதீன் உலவி, ராவுத்தர் ஷா மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர்கள் செல்லச்சாமி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அ.தி.மு.க.விற்கு தேர்தலில் தங்களது கட்சியின் முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.

Sethuraman and John Pandian meets Jayalalitha extends support

சேதுராமன், ஸ்ரீதர் வாண்டையார்

இதே போல் மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அப்துல் சமீது மகள் பாத்திமா முகாபர் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

Sethuraman and John Pandian meets Jayalalitha extends support

200 தொகுதிகளில் வெற்றி

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். தேர்தலில் அதிமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை முதல்வரிடம் அளித்து உள்ளோம் என்று அவர் கூறினார்

ஜான் பாண்டியன்

செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், அதிமுகவிற்கு எங்களின் ஆதரவை தெரிவித்துள்ளோம். ஜெயலலிதாவிடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

Sethuraman and John Pandian meets Jayalalitha extends support

ஜெயலலிதா நன்றி

நேரில் வந்து சந்தித்து தமக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா நன்றியை தெரிவித்துக் கொண்டார்.அப்போது அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

English summary
MMK Sethuraman, john pandian, Poova Jegan Moorthi and Various party functionaries have met ADMK chief Jayalalithaa and eztend their support to her party in the forthcoming assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X