For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐஎன்எஸ் சக்தி உள்பட 7 போர் கப்பல்கள் வருகை

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐஎன்எஸ் சக்தி, ஐஎன்எஸ் சத்புரா, ஐஎன்எஸ் ஷயதிரி, ஐஎன்எஸ் கோரா, ஐஎன்எஸ் குதார் ,ஐஎன்எஸ் கட்மட், ஐஎன்எஸ் கான்ஜார் ஆகிய 7 போர் கப்பல்கள் வந்துள்ளன.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு பாதுகாப்பு உள்ளிடட காரணங்களுக்காக அவ்வப்போது போர்கப்பல்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கப்பல்கள் 4 அடுத்தடுத்து வந்து சென்றன. இந்த நிலையில் நேற்று மாலையில் இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் ரோந்து கப்பல்கள் அடுத்தடுத்து வந்துள்ளன.

seven battle vessels arrived at Tuticorin port

ஐஎன்எஸ் சக்தி, ஐஎன்எஸ் சத்புரா, ஐஎன்எஸ் ஷயதிரி, ஐஎன்எஸ் கோரா, ஐஎன்எஸ் குதார் ,ஐஎன்எஸ் கட்மட், ஐஎன்எஸ் கான்ஜார் ஆகிய 7 போர் கப்பல்கள் வந்துள்ளன. இவற்றில் முதல் 6 கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் கான்ஜார் மட்டும் வெளி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இவை வழக்கமான ரோந்து பணிக்காக வந்துள்ளன. இதில் வந்துள்ளவர்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்கி செல்லவும் வந்துள்ளனர். இது போன்று கப்பல்கள் வருவது வழக்கம்தான். இது போல் இந்த முறையும் வந்துள்ளன என தெரிவித்தனர்.

ஆனால் இது சரியான காரணமல்ல என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டதால் இதையடுத்துதான் முன்னேச்சரிக்கையாக இந்த கடற்படை கப்பல்கள் தூத்துக்குடி மற்றும் கொச்சின் துறைமுகத்திற்கு அடிக்கடி வந்து செல்கின்றதாக கூறப்படுகிறது.

English summary
seven battle vessels arrived at Tuticorin port
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X