For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும் ஆசிரியர்கள்,பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும் ஆசிரியர்கள்,பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவும் பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் மொழிப் பாடத் தேர்வுகள் முடிந்த நிலையில், தொடர்ந்து ஆங்கிலம் மற்ற பிற பாடத் தேர்வுகள் நடக்க உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவர்கள் எழுதி வருகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 53 ஆயிரத்து 629 தனித்தேர்வர்கள் இந்த பொதுத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். தமிழ் வழியில் பயின்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 771 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

 தேர்வுப்பணியில் 75 ஆயிரம் பேர்

தேர்வுப்பணியில் 75 ஆயிரம் பேர்

இதற்காகத் தேர்வு மையங்கள் அரசுப் பள்ளிகள் தவிர, பல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுப் பணிகளில் மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வைக் கண்காணிக்கும் பறக்கும் படையில் மட்டும் 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடு

ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடு

மாணவ மாணவிகள் தேர்வு அறைக்கு கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட உபகரணங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது, காலணிகளைத் தேர்வு எழுதும் அறைக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும், ஆசிரியர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பள்ளிகளிக்கு தீவிர கட்டுப்பாடு

பள்ளிகளிக்கு தீவிர கட்டுப்பாடு

மேலும் பள்ளிகளுக்கு, தேர்வு தொடங்கும் முன்னர் காலை 8.30 மணிக்குள் அந்த பள்ளியைச் சேர்ந்த பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறி விட வேண்டும். விடைத்தாள் கட்டுகள் பள்ளியில் இருந்து சென்ற பின்னரே அவர்கள் மதியம் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், தேர்வு நேரத்தில் பள்ளி வாளகத்தில் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 துறை ரீதியான நடவடிக்கை

துறை ரீதியான நடவடிக்கை

பள்ளியில் தேர்வு எழுதும் தங்கள் மாணவர்களுக்கு உதவ முற்பட்டால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து மாவட்ட பள்ளி கல்விதுறை பரிந்துரைக்கும். தேர்வு அறையில் துண்டு சீட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தேர்வு கண்காணிப்பு அறை அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Severe actions Should be taken on malpractices says Exam Department. Public exams for Class 12 students are started by last week hence exam department made necessary steps on Exam centres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X