For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை விழாவில் பங்கேற்க வந்தார் அமித்ஷா… தலித் தலைவர்களுடன் சந்திப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் நடைபெறும் தலித் இயக்க மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு அக்கட்சியின் தமிழக தலைவர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் அறக்கட்டளையும், சுதேசி இயக்கமும் இணைந்து நடத்தும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் அமித்ஷா. அவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் காலையில் மதுரைக்கு கிளம்பினார். அவருடன் பாஜக தமிழக தலைவர் சவுந்தராஜனும் புறப்பட்டுச் சென்றுள்ளார். அழகர்கோயில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அமித்ஷா இன்று மாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். அதன்பின்னர் அவர் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் தேவேந்திரர் குல வேளாளர் அறக்கட்டளையின் மாநிலப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சியில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2016 சட்டசபை தேர்தல்

2016 சட்டசபை தேர்தல்

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முக்கிய அளவிலான வெற்றியை பெற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். தென் மாவட்டங்களில் பாஜகவை காலூன்றச்செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலித் விழாவில் பங்கேற்பு

தலித் விழாவில் பங்கேற்பு

பாட்டாளி மக்கள் கட்சியினர் தலித் விரோத போக்கினை கடைபிடித்து வருகிறது. திராவிட கட்சிகள் தலித் தலைவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் வெற்றி பெருகின்றனர். இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர், தலித் அமைப்பினர் நடத்தும் விழாவில் பங்கேற்க மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

காமராஜர் பிறந்தநாள்

காமராஜர் பிறந்தநாள்

கடந்த மாதம் 15ம்தேதி விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அமித்ஷா வருகை தருவதாக இருந்த நிலையில் அவர் பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சர்கள் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர்.

சேதுராமனுடன் பேச்சு

சேதுராமனுடன் பேச்சு

ஏற்கனவே மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தலைவர் டாக்டர் சேதுராமனுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் அவர் கட்சியை இணைக்கமாட்டேன் ஆனால் கூட்டணிக்குத் தயார் என்று கூறியுள்ளாராம்.

ஜாதி அரசியல்

ஜாதி அரசியல்

தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்யவேண்டுமெனில் ஜாதி ரீதியிலான அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளதால் தென்மாவட்டங்களில் பலமாக உள்ள ஜாதி சங்கத்தலைவர்களை சந்தித்து அவர்களை வளைக்கத் திட்டமிட்டுள்ளனர் பாஜக தலைவர்கள் இதற்கான அச்சாரமாகவே அமித்ஷாவின் மதுரை வருகை இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
BJP president Amit Shah arrived in Chennai on Wednesday night enroute to Madurai where a meeting has been sched uled with a sub-sect of dalits, the De vendrakula Vallalars, on Thursday with an eye on the assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X