For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவாஜியின் சாந்தி தியேட்டர் விரைவில் இடிப்பு!: மல்ட்டிபிளக்ஸ் ஆக மாறுகிறது!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள பழமையான சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாசாலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும். சென்னையின் முதல் ஏசி தியேட்டர் என்ற பெருமையுடையது. முதலில் இந்த தியேட்டர் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது. இவர் அண்ணாசாலையில் இருந்த இன்னொரு தியேட்டரான ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஆவார்.

அப்போதைய முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாந்தி தியேட்டரை திறந்து வைத்தார். இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் வெங்கடேஸ்வரா. இதனையடுத்து சிவாஜி கணேசனின் பாவமன்னிப்பு திரைப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படம் வெள்ளிவிழா கண்டது.

Shanti theatre goes the multiplex way too

சாந்தி தியேட்டர்

1962ஆம் இந்த தியேட்டரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். சிவாஜி நடித்த அனைத்து படங்களும் சாந்தி தியேட்டரில்தான் திரையிடப்பட்டன. சிவாஜி ரசிகர்களால் எப்போதும் சாந்தி தியேட்டர் நிரம்பி வழியும்.

வெள்ளிவிழா படங்கள்

சிவாஜியின் திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்கப்பதக்கம், திரிசூலம், முதல்மரியாதை ஆகிய திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

35 படங்கள் 100 நாள்

சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் 35 திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. பழனி, தில்லானா மோகனாம்பாள் திரைப்படங்கள் 132 நாட்கள் திரையிடப்பட்டன.

2005ல் ரஜினி திறப்பு

2005ஆம் ஆண்டில் தியேட்டரை புதுப்பித்தனர். சாந்தி, சாய் சாந்தி என இரண்டு தியேட்டராக மாற்றப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார்.

பிரபுவின் திரைப்படங்கள்

பிரபு நடித்த திரைப்படங்கள் இங்கு நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன. பிரபுவின் சின்னத்தம்பி திரைப்படம் வெள்ளிவிழா கண்டது. சிவாஜி புரடெக்சன் தயாரிப்பான ராஜகுமாரன் சினிமா நூறு நாட்கள் ஓடியது.

ரஜினியின் சந்திரமுகி

ரஜினியின் சந்திரமுகி படம் இங்கு திரையிடப்பட்டு 888 நாட்கள் ஓடியது. சிவாஜி நடித்த கர்ணன் படம் டிஜிட்டிலில் புதுப்பிக்கப்பட்டு இங்கு திரையிட்டனர். 50 நாட்கள் அப்படம் ஓடியது.

விக்ரம் பிரபு

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன் விக்ரம் பிரபு நடித்து வரும் கும்கி,இவன் வேற மாதிரி உள்ளிட்ட திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது.

லிங்கா கடைசி படமா?

தற்போது லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அநேகமாக இதுதான் சாந்தி தியேட்டரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தியேட்டர் இடிக்கப்பட உள்ளது. சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.

பழமையான தியேட்டர்கள் இடிப்பு

சென்னையில் ஏற்கனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்கெயிட்டி, உமா, மேகலா, ராக்கி, புவனேஸ்வரி, வசந்தி, ராஜகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு விட்டன.

மல்ட்டிப்ளக்ஸ் காம்ளக்ஸ்

இடிக்கப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

நான்கு தியேட்டர்கள்

இப்போது சாந்தி தியேட்டரும் இடிக்கப்பட்டு மல்ட்டி ப்ளக்ஸ் காம்ளக்ஸ் ஆக மாற்றப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நான்கு சிறு திரை அரங்குகளும் கட்டப்படுகின்றன. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
The gentle strains of ‘En Mannava’ from the Rajinikanth-starrer Lingaa fill the lobby of Shanti theatre on Anna Salai. The film may probably be last to be screened at the iconic theatre, which holds a special place in the hearts of fans of nadigar thilagam Sivaji Ganesan. Now, a commercial complex will come up in its place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X