For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் இருந்து திருச்சிக்கு தலைமை செயலகத்தை மாற்றலாமா? முதல்வர் எடப்பாடியார் ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: நெருக்கடி மிகுந்த நகரான சென்னையில் இருந்து திருச்சிக்கு தலைமை செயலகத்தை மாற்றலாமா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் மண்டலம் அமைக்கும் விவாகரத்தில் இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி விவாதத்தில் ஈடுபட்டன.

Shifting the Secretariat from Chennai to Trichy ? CM palanisamy Idea

இதேபோல் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி பேசி வருகின்றன. நிதி பற்றாக்குறை குறித்தும் அதற்கு யார் காரணம் என்ற ரீதியிலும் சட்டசபையில் விவாதங்கள் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் சென்னையில் சட்டமன்றம் இருக்கட்டும், ஆந்திரா பாணியில் தலைமைசெயலகத்தை மட்டும் திருச்சிக்கு மாற்றலாமா என்ற யோசனையில் முதல்வர் எடப்படியார் இருக்கிறாராம்.

ரஜினியா, அதிமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்! ரஜினியா, அதிமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்!

ஏற்கனவே எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் இப்படி ஒரு யோசனையை முன்வைத்தார். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்கள் வரும் என்பதாலோ என்னவோ அப்போது அந்த திட்டத்தை அவர் செயல்படுத்தவில்லை. ஒருவேளை அப்பபடி ஒரு திட்டத்தை எம்ஜிஆர் செயல்படுத்தி இருந்தால் இந்நேரம் திருச்சியின் வளர்ச்சி அசுரத்தனமாக மாறியிருக்கும்.

இந்நிலையில் எடப்பாடியார் தனது யோசனை குறித்து சீனியர் அமைச்சர்களிடம் ஆலோசித்தாராம். அப்போது அவர்கள் எம்ஜிஆர் காலத்திலேயே இப்படி ஒரு யோசனை இருந்ததையும் ஆனால் அது ஒத்துவாராது என செயல்படுத்தாதையும் எடுத்து கூறியிருக்கிறார்களாம்.

English summary
Chief Minister Edappadi Palanisamy think that Shifting the Chief Secretariat from Chennai to Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X