For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்ஸ் கப்பல் கவிழ்ந்து விபத்து... மாயமான தூத்துக்குடி மாலுமியை மீட்க கோரி பெற்றோர் கண்ணீர்

பிலிப்பைன்ஸில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தோமாஸ் என்ற மாலுமியை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: பிலிப்பைன்ஸில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன தூத்துக்குடி மாலுமி தோமாஸை கண்டுபிடித்து தர அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி புன்னைகாயலை சேர்ந்தவர் தோமாஸ். இவர் சென்னையை சேர்ந்த அட்மீரல் மரைன் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் மாலுமியாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் எமரால்ட் ஸ்டார் என்ற கப்பல் இந்தோனேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் அருகே சென்று கொண்டிருந்த போது பலத்த காற்று காரணமாக கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

Ship capsizes: Parents demands to retrieve the missing sailor

இந்த கப்பலில் இருந்த தோமாஸ் உள்ளிட்ட கப்பல் ஊழியர்கள் லைப் ஜாக்கெட் உடன் கடலில் குதித்துள்ளனர். இதில் 11 பேரை கோப்ரா என்ற கப்பல் மூலமாகவும், மேலும் 6 பேர் சாமரிந்தா என்ற கப்பல் மூலமும் மீட்கப்பட்டனர். எனினும் தோமாஸ் உள்ளிட்ட 10 பேரின் நிலை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தோமாஸை மீட்டு தர கோரி அவரது பெற்றோர் நெல்லை ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு கொடுத்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், காணாமல் போனவர்களை மீட்பதற்காக ஜப்பான் கடற்படையின் ஹெலிகாப்டரும், 2 ரோந்து கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது என்றார்.

English summary
Ship capsized in Philipines sea. A sailor who belongs to Tuticorin missing. His Parents requested to retreive the son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X