For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவாஜி பிறந்த நாளைக் கொண்டாடாத நடிகர் சங்கம்.. சிவாஜி பேரவை கண்டனம்

Google Oneindia Tamil News

Shivaji welfare forum condemns Nadigar Sangam for not celebrating the actor's birth day
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை தென்னிந்திய நடிகர் சங்கம் கொண்டாடல் விட்டதற்கு சிவாஜி சமூக நலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் சந்திரசேகரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாஜி மறைந்தாலும், அவர் விட்டுச்சென்ற கலைப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை, இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும், நடிக்க வரும் புதியவர்களுக்கு பாடங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அப்படிப்பட்ட மகா காலைஞனாக வாழ்த்த மறைந்த நடிகர் திலகத்தின் 86வது பிறந்த நாளில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எளிய அளவிலான நிகழ்ச்சி கூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தக்க விஷயமாகும்.

ராதாரவி தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் திலகத்தின் பிறந்தநாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்து நடத்தினார். அதன்பிறகு அந்த நடைமுறை நின்றுபோனது ஏன் என்று தெரியவில்லை.

நடிகர் சங்க பொறுப்பிலிருப்பவர்கள், படப்பிடிப்புகளில், வெளியூர்களில் இருந்திருந்தாலும்கூட, வேறு யாராவது சென்னையிலிருந்த நடிகர், நடிகைகளாவது சென்னையிலிருக்கும் நடிகர் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கலாம்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்து, கட்டிக் காத்து வளர்த்த நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்யாத தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் ரவையின் கண்டனத்தைத் தெரிவித்துக் ள்கிறோம்.

நடிகர் திலகம் சிவாஜிக்கு உரிய மரியாதையை அளிக்காமல், தொடர்ந்து உதாசீனப்படுத்தினால், தென்னிந்திய நடிகர் சங்கத்தை கண்டித்து பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று என்று அவர் எச்சரித்துள்ளார்.

English summary
Shivaji social welfare forum has condemned the Nadigar Sangam for not celebrating the actor's birth day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X