For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் அசைவபிரியர்களிடையே பீதி கிளப்பும் 'பூனை கறி'!

சென்னையில் ஆட்டிறைச்சி என பூனைக்கறி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை:பல்லாவரத்தில் உள்ள இறைச்சிக் கடையில் ஆட்டுகறி எனக்கூறி பூனைக்கறியை விற்பனை செய்த கும்பலை பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பல்லாவரம் பகுதியில் அதிகளவு பூனைகள் பிடித்து செல்லப்படுவதக விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் வந்தது. இதையடுத்து பூனைகளை பிடித்து செல்பவர்களை கண்காணித்த அந்த அமைப்பு அவர்களின செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.

Shocking! cat flesh is selling as mutton in chennai.

காரணம் அவர்கள் பூனைகளை கொன்று அவற்றின் தோலை உரித்துவிட்டு வேகவைத்து பின்னர் ஆட்டுக்கறி எனக்கூறி அங்குள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதில் பல உணவகங்களுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டதால் உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் 16 பூனைகளை மீட்டுள்ளனர்.

இதனை விசாரித்து வரும் காவல்துறையினர் எந்தந்த உணவகங்களில் பூனைக்கறி பெறப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இதற்கு பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பல்லாவரத்தில் மட்டும் பூனைக்கறி விற்கப்பட்டதா அல்லது மாநகரின் பிற பகுதிகளிலும் ஆட்டிறைச்சி என பூனைக்கறி விற்பனை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

English summary
people shocked by hearig that cat flesh is selling as mutton.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X