அடகு வைக்க முடியாதா? உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய நபர்.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே நகையை அடகு வைக்க மறுத்த அடகு கடை உரிமையாளரை இளைஞர் ஒருவர் அரிவாளால் மிகக் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில தொழில் அதிபர்கள் நகை கடைகளையும், அடகு கடைகளையும் நடத்தி வருகின்றனர். அவர்கள் திருட்டு பொருட்களை வாங்குவதாக வந்த புகார்களை அடுத்து காவல்துறையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடகுக் கடைகள் வைத்திருக்கும் வடமாநில உரிமையாளர்கள் தங்கள் கடைகளுக்கு அடகு வைக்க வரும் நபர்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொண்டு, அவை திருட்டுப் பொருட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே அடகு பிடிக்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மெட்ரோ ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு.. ரயில் முன் பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்.. திக்திக் சிசிடிவி காட்சிகள்

நகை அடகு கடை
இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே நகை அடகு வைக்க வந்த நபர் மீது சந்தேகம் கொண்டு நகையை அடகு வாங்க மறுத்த அடகு கடை உரிமையாளரை அவர் அறிவாளால் கொடூரமாக வெட்டி உள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாமண்டூரில் தர்மா ராம்சேட் என்பவர் தர்ம ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடையும், அடகு கடையும் நடத்தி வருகிறார்.

வடமாநில தொழிலதிபரின் கடை
அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் நகைகள் உள்ளிட்டவற்றை அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம் நிலையில் இன்று தர்மா ராம்சேட் அடகுக் கடையில் இருந்த போது வடபகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சில நகைகளை கொண்டுவந்து அடகு வைக்கும் 6 கூறியுள்ளார் அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் சந்தேகமடைந்த தர்மா தான் நகைகளை அடகு வாங்க முடியாது உரிய ஆவணங்களைக் கொண்டு வந்தால்தான் நகைகளை அடகு பிடிக்க முடியும் என கூறியுள்ளார். இதை இடத்தில் சிலம்பரசன் அவருடன் வாக்குவாதம் செய்த நிலையில் அருகில் இருந்தோர் அவரை அங்கிருந்து விரட்டி உள்ளனர்.

கொடூர தாக்குதல்
சிறிது நேரத்தில் இளைஞர் ஒருவர் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுச் சென்ற பின் பெண் ஒருவர் நகைகளை அடகு வைப்பதற்காக கடையில் அமர்ந்து இருந்தார் அப்போது திடீரென அரிவாளுடன் உள்ளே புகுந்த சிலம்பரசன் தர்மாவை அரிவாளால் வெட்டினார். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து தர்மா சுதாரிப்பதற்குள் கை கால் தலை உள்ளிட்ட பல இடங்களில் சிலம்பரசன் கொடூரமாக வெட்டினார்.

சிசிடிவி காட்சிகள்
உயிரைக் காத்துக்கொள்ள கடையின் மூலை முடுக்குகள் எல்லாம் ஓடி ஒளிந்த தர்மாவை விடாமல் வெட்டிய சிலம்பரசன் அங்கிருந்து தப்பிச் சென்றார். அப்போது கடையில் இருந்த பெண் ஒருவரும் திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்து அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தர்மாவை சிலம்பரசன் அரிவாளால் கொடூரமாக வெட்டிய காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் கொலை முயற்சி சம்பவம் குறித்து காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி சிலம்பரசனை தேடி வருகின்றனர்.