For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை கடையடைப்பு கிடையாது.. வெள்ளையன் அறிவிப்பு

நாளை நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டத்தை தள்ளி வைப்பதாக த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை : நாளை நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Shops Shutdown adjourned : Velliayan announced

அதில் 500, 1000, ரூபாய் நோட்டுகள் மீதான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நவம்பர் 28ஆம் தேதி கடையடைப்பு செய்வது என அறிவித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த கடையடைப்பு தற்காலிகமாக கைவிடப்படுகிறது. அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

டிசம்பர் 15ஆம் தேதி அன்று தமிழகத்தின் அனைத்து வட்டங்களிலும் முக்கிய கடைவீதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்படும். ஜனவரி 1ஆம் தேதி முதல் அன்று கருப்புக்கொடிகள் இறக்கப்பட்டு காந்தி தேசம் காப்போம் என்று உறுதி மொழி ஏற்கும் விதத்தில் அதே கம்பங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும்.

நாளை இடதுசாரி அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Merchant associations announced that Shops will be Shut down tomorrow. But the Tamil Nadu merchant association of the council Chairman Vellaiyan now states tha the protest is temporarily canceled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X