For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக, புதுச்சேரி பார் கவுன்சிலின் தேர்தல் வாக்குகளை எண்ண தடை!

தமிழக, புதுச்சேரி பார் கவுன்சிலின் தேர்தல் வாக்குகளை எண்ண இந்திய பார் கவுன்சில் தடை விதித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக, புதுச்சேரி பார் கவுன்சிலின் தேர்தல் வாக்குகளை எண்ண இந்திய பார் கவுன்சில் தடை விதித்து இருக்கிறது.

தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கான தேர்தல் கடந்த மார்ச் 28 தேதி நடந்து இருக்கிறது. பார் கவுன்சிலுக்கான தலைவர், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த தேர்தலின் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள். 25 உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.

Should not count the Tamil Nadu Bar Council election votes says, India Bar Council

இந்த தேர்தலில் மொத்தமாக 53 ஆயிரம் வக்கீல்கள் வாக்களித்து இருக்கிறார்கள். உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர்அலி, டி.மதிவாணன் ஆகியோர் கண்காணிப்பில் இந்த தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் போடப்பட்ட வாக்குகளை எண்ண இந்திய பார் கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. பார் கவுன்சில் தேர்தல் வாக்குகளை வெளிமாநில பிரதிநிதிகள்தான் எண்ண வேண்டும் என்று தேர்தல் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீர்ப்பாய உத்தரவை அடுத்து மறுதேதி அறிவிக்கும் வரை வாக்குகளை எண்ண கூடாது என்று இந்திய பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான கடிதத்தை ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர்அலி, டி.மதிவாணன் ஆகியோருக்கு அனுப்பி உள்ளது.

English summary
Tamil Nadu Bar Council election was held on March 28. Now India Bar Council says that officials should not count the Tamil Nadu Bar Council election votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X