For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம்.. காரைக்கால் மீனவர்களும் ஆதரவு

புதுச்சேரியில் வரி உயர்வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம்- வீடியோ

    புதுச்சேரி: நகராட்சியின் வரி உயர்வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி நகராட்சி தொழில்உரிம கட்டண வரி, தொழில் வரி, வணிக வளாக வரி உள்ளிட்ட வரிகளை அண்மையில் அதிகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    Shut down in Puducherry against Municipality tax rises

    இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. கடையடைப்பை முன்னிட்டு திரையரங்குகளில் பகல் காட்சி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே புதுச்சேரி கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக காரைக்காலிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காரைக்கால் மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 11 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புதுச்சேரியில் முழுகடையடைப்பு போராட்டம் காரணமாக 200 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    English summary
    Shut down in Puducherry against Municipality tax rises. Karaikal also shut down is going on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X