For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறைந்து வரும் தண்ணீர்… மணிமுத்தாறு அணை மூடல்.. குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

நீரின் அளவு குறைந்து வருவதால் மணிமுத்தாறு அணை மூடப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நெல்லை: தண்ணீர் குறைந்து வருவதால் மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. இதனால் குடிநீர் வினியோகம் குறையும் என தெரிகிறது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழையும் டாடா காட்டிவிட்டு சென்றுவிட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்தது.

Shutters closed at Manimutharu Dam after inflow reduce

இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 10 அடி வரை உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 3220 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 34.85 அடியாக உயர்ந்தது. அணையில் நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணை மூடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பெய்த வந்த மழையும் நின்று வி்ட்டது.

மணிமுத்தாறு அணையில் தண்ணீர் இல்லாததால் மூடப்பட்டது. என்றாலும், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை வட்டாரங்கள், பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அதிலிருந்து 100 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையிலிருந்து 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. தற்போது பெய்த மழை காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் மணிமுத்தாறு அணை மூடப்பட்டது என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Manimutharu dam was closed after inflow reduced at Tirunelveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X