For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்சூர் அலிகான் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்.. கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட சிம்பு

மன்சூர்அலிகான் தவறாக பேசி இருந்தால் அவருக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    மன்சூர் அலிகான் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்..சிம்பு கேள்வி-வீடியோ

    சென்னை: மன்சூர்அலிகான் தவறாக பேசி இருந்தால் அவருக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார். மன்சூர்அலிகான் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசாரை சந்தித்து சிலம்பரசன் விளக்கம் கேட்டார்.

    சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளை நடிகர் சிலம்பரசன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நடிகர் மன்சூர் அலிகான் எதற்காக சிறையில் அமைக்கப்பட்டார் என்று காவல்துறையினரிடம் சிலம்பரசன் கேட்டுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மன்சூர் அலிகான் நல்ல எண்ணத்திற்காக போராட வந்தார், தமிழன் என்ற உணர்வோடு போராடினார்.

    Silambarasan apologised in favour os Mansoor alikhan

    யார் செய்தது சரி யார் செய்தது தவறு என்று கேட்பதற்காக இங்கு வரவில்லை. ஒரு உணர்வுடன் நமக்காக என்னையும் கைது செய்யுங்கள் என்று முன் வந்தவர் மன்சூர்அலிகான். அதே சமயம் அறுவை சிகிச்சை செய்த நிலையிலும் அவர் சிறையில் இருக்கிறார் என்று அவருடைய மகன் கூறியதால் அவர் சிறையில் என்ன நிலையில் இருக்கிறார் எதற்காக அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே வந்தேன். மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் சிலம்பரசன் கேட்டுக்கொண்டார்.

    மன்சூர்அலிகான் தவறாக பேசி இருந்தால் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
    மன்சூர் அலிகான் பேசியது தவறு என்றால் அனைவர் செய்ததும் தவறு தான் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Silambarasan went to Chennai police comissioner office to know about Mansoor ali khan jailed and apologised for him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X