For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரியில் புனித வெள்ளி அனுசரிப்பு - சிறப்பு பிரார்த்தனையில் தமிழக-கேரள மக்கள் பங்கேற்பு

புனித வெள்ளியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பயணம் நடைபெற்றது.

Google Oneindia Tamil News

Recommended Video

    புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு-வீடியோ

    கன்னியாகுமரி; இன்று கிறிஸ்துவர்களின் முக்கிய தினமான புனித வெள்ளியை ஓட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    கிறிஸ்துவ மக்களின் கடவுளான இயேசு கிறிஸ்து , சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளி என உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களின் துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    Silent prayers, Way of the Cross mark Good Friday in Kanyakumari

    இந்த நாளின் போது உலகில் உள்ள மக்களின் பாவங்களை போக்க இயேசு கிறிஸ்து, தனது ரத்தத்தை சிந்தினார் என கிறிஸ்துவ மக்களால் நம்பப்படுகிறது.

    இந்த நாளில் கல்வாரிச் சிலுவையில் இயேசு கிறிஸ்து பட்ட துன்பங்கள் நினைவு கூறப்படும். இன்று புனித வெள்ளி நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர்.

    அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்திலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனைதொடர்ந்துகருங்கல் அருகே துண்டத்துவிளை தூய அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து சுமார் 8 கி மி தொலைவில் உள்ள புனித கருணைமாதா மலைக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் திருச்சிலுவை திருப்பயணம் மேற்கொண்டனர்.

    Silent prayers, Way of the Cross mark Good Friday in Kanyakumari

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த இயேசுவின் சிலுவை பாடுகளை உணர்த்தும் விதமாக கிறிஸ்தவர்கள் தத்ரூபமாக நடித்து காட்டி இந்த சிலுவை பயணத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழக மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

    English summary
    Special prayers took place in the churches of Kanyakumari district, where the main day of Christianity is celebrated with holy silver.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X