For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிம்பு போராட்ட அழைப்புக்கு அமோக ஆதரவு.. மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு! நெகிழ வைக்கும் தருணங்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் சிலம்பரசன் அழைப்பை ஏற்று தமிழகம் எங்கும் இன்று பல லட்சம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்தியுள்ளனர். நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளும் கூட இப்போராட்டத்தில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் தனது வீட்டு முன்பாக கை கட்டி கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார்.

Simbu gets huge response for his call on Jallikattu

தமிழகமெங்கும் இதேபோல மக்களும் போராட்டத்தில் ஈடுபட அவர் நேற்றே அழைப்பு விடுத்தார். எங்கு இருக்கிறீர்களோ அங்கே 10 நிமிடம் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுங்கள் என சிம்பு அழைப்புவிடுத்தார்.

சிம்பு அழைப்பின் பின்னணியிலுள்ள நியாயத்தை ஏற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழகம் முழுக்க இன்று அமைதி போராட்டம் நடத்தினர். போராட்ட கள நிலவரத்தை போட்டோவாக எடுத்து சிம்புவின் டிவிட்டர் கணக்குடன் அதை ஷேர் செய்துள்ளனர்.

இதில் நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி, உபகரணம் உதவியுடன் சாலையோரம் நின்றபடி தனது ஆதரவை அளித்த போட்டோ நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதோ சிம்புவின் அழைப்பை ஏற்று நடந்த அமைதி போராட்ட நிகழ்வுகளின் தொகுப்பு:

மாற்றுத்திறனாளியின் ஊக்கம்

குவிந்த கூட்டம்

மனித சங்கிலி

ஓ.எம்.ஆர். சாலை

சேத்துப்பட்டில் சிம்புடன் கைகோர்ப்பு

களத்தில் யுவன் சங்கர் ராஜா

பெருங்குளத்தூரில் பெரும் கூட்டம்

டி.எல்.எப் ஐடி பார்க்

English summary
Simbu gets huge response for his call on Jallikattu. Participated shared pictures as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X