For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீருக்காக சண்டை வேண்டாம்.. இந்தாங்க குடிங்க.. நெகிழ வைத்த கன்னடர்கள் #UniteForHumanity

கர்நாடகத்தில் காவிரி நீரை பகிர்வதில் அரசியல் செய்யப்படுகின்றன என்பதை சிம்பு அவரது திட்டத்தின் மூலம் தோலுரித்து காட்டி விட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சிம்புவின் கோரிக்கையை ஏற்ற கன்னடர்கள் நெகிழ்ச்சி வீடியோ

    சென்னை: கர்நாடகத்தில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் கன்னடர்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் சில அரசியல்வியாதிகள்தான் காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றன என்பதையும் சிம்பு கொடுத்த ஒரு ஐடியா வெளிகாட்டிவிட்டது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.அதில் சிம்பு கலந்து கொள்ளவில்லை.

    இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு பொதுமக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்றும் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மனிதாபிமானத்துக்காக ஒன்றுபடுவோம்

    சிம்புவின் ஐடியா கர்நாடகத்தில் சரியாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. நேற்று முதல் தமிழனுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் குவிகின்றன. #UniteForHumanity என்ற ஹேஷ்டேக் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள கன்னட பெண் கூறுகையில், காவிரி அன்னை நாம் அனைவருக்கும் தாய். சென்னையில் 2015-இல் பெருவெள்ளம் ஏற்பட்டபோது நாங்கள்தான் உதவிகளை செய்தோம். காயமடைந்தவர்களுக்கு ரத்தத்தை கொடுத்தோம். ரத்தத்தையே கொடுத்த நாங்கள் தண்ணீரை கொடுக்க மாட்டோமா என்ன. சிம்புவின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்றார் அந்த பெண்.

    ஒன்றாக வாழ்வோம்

    இந்த வீடியோவில், தமிழர்களும் கன்னடர்களும் ஒருவரே. தண்ணீருக்காக சண்டையிட்டு கொள்ள வேண்டாம். நாம் அனைவரும் காவிரி அன்னையின் பிள்ளைகள். வெறுப்புகளை கடந்து நாம் ஒன்றாக வாழ்வோம். தண்ணீரை சரிசமமாக பகிர்ந்து கொள்வோம் என்று கூறி தண்ணீரை பகிர்ந்து கொள்கின்றனர்.

    ஒரு கிளாஸ் என்ன ஒரு பாட்டிலே கொடுக்கிறோம்

    இந்த வீடியோவில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் கன்னட பெண் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் என்ன , ஒரு பாட்டில் தண்ணீரே தருவோம் என்று கூறி அதை தருகிறார்.

    மற்ற மாநிலங்களுக்கு தருவோம்

    சிம்பு, காவிரி விவகாரத்தை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி. நீங்கள் ஒரு கிளாஸ் நீர் தான் கொடுக்க சொன்னீங்க. நாங்கள் ஒரு பாட்டில் நீர் கொடுக்கிறோம். தேவைப்பட்டால் இன்னும் நிறைய தருகிறோம். தமிழகத்துக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் தருகிறோம்.

    தண்ணீர் கொடுக்கிறோம்

    இன்த வீடியோவில் சிம்பு அவர்களுக்கு நமஸ்காரம். தண்ணீரை பகிர்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம் என்று கூறி அந்த கடையில் அமர்ந்துள்ள தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்தனர்.

    போராட்டம் வேண்டாம்

    போராட்டம் வேண்டாம்

    இரு மாநிலங்களிலும் அரசியல்வியாதிகளின் விளையாட்டுக்களை சிம்புவின் ஐடியா மூலம் மக்கள் புரிந்து கொள்ள உதவுகிறது. செருப்பு வீச்சு, உண்ணாவிரதம், ரயில் மறியல் போன்ற வெட்டி வேலைகளை விட்டு விட்டு இப்படி ஒரு வித்தியாசமான ஐடியா சொன்னதற்காக சிம்புவைப் பாராட்டலாமே.

    English summary
    Kannadigas are not opposing to give water for Tamilnadu. Its purely politics. This reveals from Simbu's idea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X