For Daily Alerts
Just In
சிங்கிள் டீ குடித்து விட்டு பிரச்சாரம் செய்த சிங்கமுத்து.. அதிமுக ரொம்ப பிசி
சென்னை : ஆர்.கே.நகரில் நடிகரும், அதிமுக பேச்சாளருமான சிங்கமுத்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் நாள்களே இருப்பதால் பிரசாரம் களைகட்டி வருகிறது. அதிமுக ,திமுக, தினகரன் அணியினர் என தங்களுக்கென பிரசார பாடல்களை உருவாக்கிவிட்டனர்.
ஆர்கே நகரில் பிரசாரம் செய்வதற்காக நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான சிங்கமுத்து தொகுதிக்கு வருகை தந்தார். முன்னதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் டீக்குடித்து கொண்டே ஆலோசனை நடத்தினர்.
பின்பு பிரசார வாகனத்தில் சென்று அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.