For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர் தொட்டியில் தடுக்கி விழுந்து இறந்த ஸ்ரீதேவி?

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்த தடயவியல் ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி- வீடியோ

    சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் உடல் நிலை தடுமாறி, தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    ஸ்ரீதேவி துபாயில் நேற்று முன்தினம் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    முதல் தகவல்

    முதல் தகவல்

    இந்த நிலையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது அவரது மரணம் குறித்த தடயவியல் ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது.

    மது குடித்தார்

    மது குடித்தார்

    அதன்படி அவர் உடலில் மது குடித்ததற்கான தடயம் இருந்துள்ளது. அதே சமயத்தில் அவர் உடல்நிலை தடுமாறி தண்ணீர் தொட்டியில் விழுந்து இருக்கிறார்.

    உடல் எம்பாமிங்

    உடல் எம்பாமிங்

    இவரது உடல் துபாயில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்படும்.

    ஸ்ரீதேவி இறப்பு சான்றிதழ்

    ஸ்ரீதேவி இறப்பு சான்றிதழ்

    அதன்பின் ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் மருத்துவமனையில் இருந்து பெறப்படும். துபாயில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது. துபாயில் இருந்து இரவு 11 மணிக்கு முன் ஸ்ரீதேவி உடல் மும்பை வருகிறது.

    English summary
    Sridevi ruled the Bollywood for many years as the a rocking star. She was hailed as tthe first Lady superstar. She was 54. Indian cricketers condolence for Sir Devi death. Sir Devi's body will be taken to Mumbai by special flight today night. Sir Devi's lost balance and fell into the bathtub and died.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X