For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எச். ராஜா நேரா உள்ளே போய்ட்டாராமே.. வாக்காளர்கள் குமுறல்.. ரங்கசாமியும் அப்படித்தான்!

சிவகங்கை தொகுதி வேட்பாளர் குடும்பத்துடன் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha elections 2019: காரைக்குடியில் வாக்கு பதிவு செய்தார் ஹெச்.ராஜா- வீடியோ

    காரைக்குடி: வரிசையில் எல்லாம் நிற்கவில்லை.. அதையெல்லாம் தாண்டி எச்.ராஜா ஸ்டிரைட்டா போய் ஓட்டு போட்டுட்டாராம்!

    காரைக்குடியில் உள்ள மகரிஷி பள்ளியில் எச்.ராஜாவுக்கு ஓட்டு. இங்கு காலையில 7 மணியில் இருந்தே ஜனங்க வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள்.

    அப்போது, வெள்ளை நிற பளிச் டிரஸ், நெற்றியில் குங்குமம் என மங்களகரமான ஸ்டைலில் வந்தார். அவருடன் அவரது குடும்பதினரும் வந்திருந்தனர்.

    எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்

    20 நிமிடங்கள்

    20 நிமிடங்கள்

    ஆனால் அங்கு வரிசையில் நிற்காமல், குடும்ப உறுப்பினர்களுடன் அதிரடியாக வாக்குசாவடிக்குகள் நுழைந்துவிட்டார். இதனை வரிசையில் நின்றவர்கள் கவனித்து கொண்டே இருந்தனர்.

    ஊழியர்கள்

    ஊழியர்கள்

    கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை எச்.ராஜா பூத்தை விட்டு வெளியே வரவில்லையாம். அவர் குடும்பத்துடன் வாக்களித்து செல்லும் வரை வேறு யாரையுமே தேர்தல் ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லையாம்.

    புலம்பல்

    புலம்பல்

    ஜனநாயக முறைப்படி வரிசையில் நின்றுதான் வாக்களிக்க வேண்டும், ஆனால் இவர் இப்படி குடும்பத்துடன் உள்ளே அடாவடியாக சென்று ஓட்டுப்போட்டு விட்டாரே, அதிகாரிகள் கூட இதை கண்டுகொள்ளவில்லையே என அங்கிருந்தோர் புலம்பினார்களாம்!

    விதிமீறல்

    விதிமீறல்

    ஆனால் எச்.ராஜா மட்டுமல்ல, நேற்று புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும் கூட நேற்று விதி மீறலில் ஈடுபட்டார். பைக்கில் ஹாயாக வந்த அவர் விதிகளை மீறி வாக்குச் சாவடி அமைந்துள்ள மையத்துக்குள்ளேயே பைக்கை கொண்டு போய் நிறுத்தினார். பின்னர் வரிசையைப் புறக்கணித்து விட்டு நேராக உள்ளே போய் வாக்களித்தார். யாரையும் அவர் கண்டுகொள்ளவில்லை, அவரையும் யாரும் தடுக்கவும் இல்லை.

    வரிசை

    வரிசை

    அதேசமயம், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள், நடிகர்கள் வரிசையில் நின்றுதான் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP H Raja and Puduchery Rangasamy have casted their vote and didnt keep the rules
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X