For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அனு"விடத்திலும் அன்பு செய்.. சபாஷ் சிவகார்த்திகேயன்!!

அனு என்ற புலிக்குட்டியை தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

Google Oneindia Tamil News

Recommended Video

    10 வயது அனு என்ற புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!!-வீடியோ

    காஞ்சிபுரம்: நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள 10 வயது அனு என்ற புலியை தத்தெடுத்துள்ளார்.

    "மோதி மிதித்து விடு பாப்பா" என்ற குறும்படத்தில் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்பதை பற்றி விழிப்புணர்வு அளிக்கும் விதத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் காசு கூட வாங்காமல் அவர் நடித்ததாகவும் கூறப்பட்டது.

    [ 'டிட்லி' புயல்.. யாரு வச்ச பேரு தெரியுமா? ]

    6 மாத பராமரிப்பு

    6 மாத பராமரிப்பு

    இந்நிலையில், அழிந்து வரும் இந்தியாவின் தேசிய விலங்கான புலிக்குட்டி ஒன்றினை தத்தெடுத்துள்ளார். வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 'அனு' என்கிற 10 வயது வெள்ளை நிற புலிக்குட்டியைத்தான் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். வரப்போகிற ஆறு மாதங்களுக்கும் இந்த அனு சிவகார்த்திகேயன் பராமரிப்பில்தான் இருக்குமாம்.

    6 மாதத்திற்கு செலவு

    6 மாதத்திற்கு செலவு

    அதுமட்டுமல்ல... புலி மற்றும் சிங்கத்தின் உணவிற்காக நாளொன்றிற்கு ரூ.ஆயிரத்து 196 ரூபாய் ஆகிறதாம். அதனால் அடுத்த ஆறு மாசத்துக்கு அனு புலிக்குட்டியை பராமரிப்பு செலவுக்காக சுமார் 2.12 லட்சம் ரூபாயை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சிவகார்த்தியேன் வழங்கியுள்ளாராம். அதற்கான ஆவணத்தையும் அவர் பூங்கா இயக்குநர் எஸ். யுவராஜிடம் வழங்கினார்.

    குடிமகனின் கடமை

    குடிமகனின் கடமை

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், "இந்த தலைமுறையில் இந்த அரிய அழிநிலை விலங்குகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும் என்றார்.

    வாழ்த்துக்கள் சிவா

    வாழ்த்துக்கள் சிவா

    எனவே அனைவரும் பூங்காவிலுள்ள 174 அரிய வகையான வனஉயிரினங்களில் ஏதாவது ஒன்றை தத்தெடுக்க முன் வரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் வேண்டுகோளும் விடுத்தார். அழிந்து வரும் தேசிய விலங்கான புலிக்குட்டியை தத்தெடுத்த சிங்கக்குட்டி சிவகார்த்திகேயனுக்கு கங்கிராட்ஸ்!!

    English summary
    Sivakarthikeyan adopted a Tiger called Anu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X