For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ... 3 பெண்கள் உட்பட 7 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் உள்ள நாகமல்லி தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளார். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Sivakasi: Five killed in blast caused by exploding firecrackers

கடந்த சில தினங்களாக பட்டாசு ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பட்டாசு தயாரிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பட்டாசு ஆலயத்தில் மீண்டும் பணிகள் தொடங்கியது

அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பவுல் ராஜ், சண்முகவேல், விஜயா,முருகேஸ்வரி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sivakasi: Five killed in blast caused by exploding firecrackers

இதனைத்தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். எனினும் விபத்து குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை உரிமையாளர் சக்திசண்முகம் தலா ரூ.5.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

Sivakasi: Five killed in blast caused by exploding firecrackers

இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Seven people, including three women, were killed in a blast caused by exploding firecrackers at Sivakasi town in Virudhunagar district today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X