For Daily Alerts
கார்டூனிஸ்ட் கோபுலுவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி
சென்னை: 91 வயதில் மரணமடைந்த பிரபல ஓவியர் கோபுலுவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார்.
பத்திரிகை உலகின் ஜாம்பவான் ஓவியர்களுள் ஒருவர் கோபுலு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 91 வயதான கோபுலு இன்று மாலை சென்னையில் காலமானார்.

திரையுலகமும், பத்திரிகை உலகமும் கோபுலுவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.
மூத்த நடிகரும், ஓவியருமான சிவகுமார், மறைந்த கோபுலுவுக்கு தனது அஞ்சலியைச் செலுத்தினார்.
தான் விரும்பி ரசித்தவை கோபுலுவின் ஓவியங்கள் என்று கூறிய சிவகுமார், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.