For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கணி காட்டுத் தீ விபத்து: மதுரை அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு தீவிர சிகிச்சை

தேனி குரங்கணி மலை தீ விபத்தில் சிக்கிய 6 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    தேனி குரங்கணி காட்டுத் தீவிபத்து 8 பேர் பலி.. சிக்கியவர்களின் விபரம்- வீடியோ

    மதுரை: தேனி குரங்கணி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கி படுகாயமடைந்த 6 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தேனி அருகே குரங்கணி மலைப்பகுதியில் நேற்று பகலில் பயங்கர காட்டுத்தீ பரவியது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.

    Six injured persons admitt in Madurai Hospital

    இதையடுத்து மத்திய அரசின் உதவியை கோரப்பட்டது. தீ விபத்தில் சிக்கியோரை மீட்க டீ எஸ்டேட் தொழிலாளர்களும் முயற்சித்தனர். இதுவரை 8 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தீ விபத்தில் சிக்கிய 27 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். டோலி மூலம் 27 பேரும் மலையில் இருந்து கீழே கொண்டுவரப்பட்டனர்.

    இவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் கேரளா பகுதியில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் 2 பேர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    English summary
    Eight of the 39 trekkers were trapped in a massive forest fire in Theni Forest. Sixt students have been rescued and taken to hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X