For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீச்சு, கருப்புக் கொடி- நாம் தமிழர் கட்சியின் 58 பேர் கைது!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை போட்டியின் இடையில் மைதானத்திற்குள் செருப்பை வீசி ரசிகர்கள் போராட்டம்

    சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் போது முதலில் செருப்புகள் வீசப்பட்டன. பின்னர் 18-வது ஓவரில் திடீரென கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டங்களை நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Slippers thrown in Cheppak Stadium

    கடுமையான எதிர்ப்புக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

    Slippers thrown in Cheppak Stadium

    ஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில நபர்கள் தாங்கள் அணிந்திருந்த பனியன்களையும் கழட்டி வீசினர்.

    கேலரியின் மேல் தளத்தில் இருந்து பார்வையாளர்கள் 8 பேர் காலனிகளையும் தாங்கள் அணிந்திருந்த சட்டையையும் கழட்டி வீசினர். இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Slippers thrown in Cheppak Stadium

    கைது செய்யப்பட்ட 8 பேரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.மைதானத்திற்குள் காலணி வீசப்பட்டதால் கிரிக்கெட் போட்டி 2 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    Slippers thrown in Cheppak Stadium

    கருப்புக் கொடி- 50 பேர் கைது

    இதனைத் தொடர்ந்து 18-வது ஓவரின் போது பார்வையாளர் வரிசையில் இருந்து திடீரென முழக்கங்கள் கிளம்பின. கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. கருப்புக் கொடிகளை பறக்கவிட்ட நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    English summary
    Slippers thrown in Cheppak Stadium. Four persons have been arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X