For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை ... பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அழும் கொடூரம்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பாலக்காடு நோக்கி மற்றொரு தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

இதனிடையே பெங்களூருக்கு மலர் ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து வந்த பேருந்து லாரியை கவனிக்கவில்லை.

மோதல்

மோதல்

அருகில் வந்தபோது பேருந்தின் ஓட்டுநர் லாரியை பார்த்துவிட்டார். இதனால் பதற்றமடைந்த அவர் லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து திருப்பியுள்ளார். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே பாலக்காடு நோக்கி சென்ற மற்றொரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

20 பேர் காயம்

20 பேர் காயம்

இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகிவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Recommended Video

    பாகுபலி பாடலை அசத்தலாக இசையமைக்கும் சிறுவன் | Bahubali Music By Small Boy | Oneindia Tamil
    தெரியவில்லை

    தெரியவில்லை

    இந்நிலையில் இந்த விபத்திலிருந்து போலீஸார் 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை உயிருடன் மீட்டுள்ளனர். அந்த சிறுவன் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அழுகிறான். மற்றபடி பெற்றோர் பெயரை அவனால் கூற தெரியவில்லை.

    சோகம்

    சோகம்

    இதுகுறித்து சேலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரது உறவினர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்துள்ளனர். பெண்ணின் புகைப்படத்தை பார்த்து சிறுவன் அழும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A small boy who rescued from Salem accident cries on seeing a lady's photo. Police investigates his parents.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X