For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடான கூட்டணி தொடரும்: சரத்குமார்

Google Oneindia Tamil News

தென்காசி: வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - சமக கூட்டணி தொடரும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தது. அக்கட்சி தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

smk continue in the AIADMK alliance

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்.

அதிமுக வெற்றி பெற உறுதுணையாக இருப்போம். நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் திறம்பட நிறைவேற்றி வருகிறார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 9 மாதம் விடுப்பு உள்ளிட்ட நல்ல மசோதாக்களை நிறைவேற்றி நிறைவாக ஆட்சியை நடத்தி வருகிறார்.

சட்ட மன்றத்தில் திமுக எதிர் கட்சி தலைவர் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்வதாகவே உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக பிரித்து புதிய மாவட்டம் அமைக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது. விரைவில் தகுதி வாய்ந்த தென்காசி மாவட்டமாக அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.

English summary
Samathuva Makkal Katchi President Sarathkumar has said his party would continue in the AIADMK alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X