For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணு உலையில் திடீர் கோளாறு- மின்உற்பத்தி பாதிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

ராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் அணு உலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

Snag-hit unit at K'kulam stops power production

2-வது அணு உலையும் ஏறக்குறைய மின் உற்பத்திக்கு தயாராகிவிட்டது. தற்போது இறுதிகட்ட ஆய்வு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கூடங்குளம் முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்துக்கும், தென் மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென முதல் அணு உலையில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அணு விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் கோளாறை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் கோளாறை உடனடியாக சரிசெய்ய முடியாததால் மின் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Power generation at the first 1,000-MW unit of the Kudankulam Nuclear Power Project (KNPP) came to a grinding halt on Sunday due to a technical snag in one of its reactors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X