For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.. வாராய் கண்ணா.. பின்னி பிணைந்த பாம்பு டான்ஸ்

இரு பாம்புகள் நடனமாடுவதை பெண்கள் வீடியோவில் படம் பிடித்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பின்னி பிணைந்த பாம்புகளின் நடனம்! வீடியோ

    திருப்பூர்: ஊர்ந்து செல்லும் உயிரினங்களிலேயே பாம்பு என்றாலே மனிதனுக்கு தனி "காப்ரா"தான். போதாக்குறைக்கு பாம்பை கண்டால் படையும் நடங்கும் என்று பழமொழியும் சொல்லிவைத்து சென்றுவிட்டார்கள் நம் பெரியவர்கள். பாம்பை கண்டால் பயம் ஒருபுறம் இருந்தாலும், இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தாலே அது அழகுதான்! அதிலும் அவை நடனமாடி தொடங்கிவிட்டால். அழகோ அழகுதான்!

    பாம்புகள் நடனத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இப்படி பாம்புகள் பின்னிப் பிணைவது என்பது இரண்டும் தங்கள் காதலை வெளிப்படுத்ததான் என கூறப்படுகிறது. அப்போது அவை நடனமாடவும் துவங்கிவிடுமாம். இந்த காதலை வெளிப்படுத்தி கலவியில் முடிய, இரண்டு பாம்புகளும் ஒரு மணி நேரமாவது எடுத்துக் கொள்ளுமாம்.

    யார் பலசாலி

    யார் பலசாலி

    பின்னிப் பிணைந்து நடனம் ஆடும் நேரங்களில், யார் தங்களை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தாலும் இந்த பாம்புகள் அதனை கண்டுகொள்வதே கிடையாதாம். தங்கள் கலவியிலேயே மூழ்கி கொண்டிருக்குமாம். பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனமாட இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். பின்னிக்கிடக்கும் பாம்புகள் இரண்டுமே ஆண் பாம்புகளாம். நம்ம ஊர்ல காளையை அடக்கினால் பெண் தருவது என்பது மாதிரி பாம்புகளுக்குள் ஒரு போட்டி நடக்குமாம்.

    பெண் பாம்பை தேடி ஆண் பாம்பு

    பெண் பாம்பை தேடி ஆண் பாம்பு

    அதன்படி இரண்டு ஆண் பாம்புகள் சேர்ந்து கொண்டு பிணைந்து கொண்டு திமிறி எழும்புவது. அப்படி நடைபெறும் இந்த வீரவிளையாட்டில் எந்த பாம்பின் தலை தூக்கியிருக்கிறதோ, அந்த பாம்புதான் வெற்றி பெற்ற பாம்பாம். பின்னர் தோற்ற பாம்பு தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அந்த இடத்தை விட்டு போய்விடுமாம். வெற்றி பெற்ற பாம்பு, அங்கே மறைந்திருக்கும் பெண் பாம்பை தேடி சென்று கலவியில் ஈடுபடுமாம். இப்படியும் பாம்பு நடனத்திற்கு காரணம் சொல்கிறார்கள். ஆனால் இவற்றில் உண்மை எதுவானால் என்ன? நமக்கு வேடிக்கை பார்க்க பாம்பு நடனம் ஆடினால் சந்தோஷம்தானே?

    செல்போனில் படம்பிடிப்பு

    செல்போனில் படம்பிடிப்பு

    நேற்றுகூட ஈரோடில் ஒரு பாம்பு டான்ஸ் நடந்துள்ளது. இங்கு திண்டல் என்ற பகுதி உள்ளது. இது ஒரு புறநகர் பகுதியாகும். காலை 10 மணிக்கு மேல் பெரும்பாலானோர் வேலைக்கு சென்று விட்டார்கள். இப்பிள்ளைகளும் காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டார்கள். இதனால் இல்லத்தரசிகள் மட்டுமே அந்த பகுதியில் வீட்டில் இருந்துள்ளனர். அந்த நேரம் பார்த்துகுடியிருப்பு பகுதிக்கு அருகில் இரண்டு பாம்புகள் விளையாடி கொண்டிருந்ததை சில பெண்கள் பார்த்துவிட்டனர். எல்லா வீட்டு பெண்களுக்கும் இந்த தகவலை கூறினர். அலறியடித்து ஓடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. எல்லாரும் அவர்களது மொட்டை மாடிக்கு சென்று செல்போனில் இந்த நடனத்தை படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    ஒரே ரொமான்ஸ்தான்

    சுமார் 6 அடி நீளமுள்ள சாரைபாம்புகள் 4 அடி உயரத்திற்கு மேல் எழும்பி துள்ளி துள்ளி விளையாடியது. நாம் எங்கிருக்கிறோம், நம்மை யார் பார்க்கிறார்கள், என்றெல்லாம் அந்த பாம்புகள் கண்டுக்கொள்ளவே இல்லை. இப்படியே ஒரு மணி நேரம் டான்ஸ்தான். பின்னிப்பிணைந்து ஒரே ரொமான்ஸ்தான். முழு நடனத்தையும் பெண்கள் பார்த்து மகிழ்ந்தனர். கடைசியில் ஒரு வழியாக பாம்பு டான்ஸ் முடிந்தது. நடனமாடிய பாம்புகள் இரண்டும் களைத்துப் போய் அங்கிருந்த புதருக்குள் ஓடி மறைந்து விட்டதாம். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Two snakes' dance mesmerized the people near Thirupur yesterday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X