கருணாநிதி பற்றிய கவலையில் ட்விட்டர் டிஸ்பிளே, ப்ரொபைல் பிக்சரை மாற்றிய ராதிகா
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ள நடிகை ராதிகா ட்விட்டரில் தனது டிஸ்பிளே படத்தை கருப்பாக மாற்றியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இன்றுடன் 11வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 24 மணிநேரம் கழித்தே எதுவும் கூற முடியும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருணாநிதி பற்றி நடிகை ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கலைஞரின் உடல்நிலை குறித்து அறிந்து கவலையாக உள்ளது. அவருக்காகவும், அவரது குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
So disturbing to hear about @kalaignar89,my prayers for him and his family .
— Radikaa Sarathkumar (@realradikaa) August 6, 2018
மேலும் ட்விட்டரில் தனது டிஸ்பிளே படத்தை கருப்பாக வைத்துள்ளார். ப்ரொபைல் படத்தில் தானும், கணவர் சரத்குமாரும் கருணாநிதியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்துள்ளார்.