For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எமர்ஜென்ஸியை மிஞ்சிய சர்வாதிகாரம்.. சமூக வலைதளங்களில் மக்கள் கடும் கொந்தளிப்பு!

500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது எமர்ஜென்ஸியை மிஞ்சிய சர்வாதிகாரம் என்று சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்புக்கு மக்களிடையே கடும் கொந்தளிப்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

கள்ள நோட்டுக்களை ஒழிக்க இது உதவும் என்றாலும் கூட நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களைத்தான் இது பெருமளவில் பாதிக்கும் என்ற கருத்து மக்களிடையே எழுந்துள்ளது.

மோடியின் அறிவிப்பால் மக்கள் பல்வேறு வகையான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வரத் தொடங்கியுள்ளன.

மோடி அறிவிப்பால் பெரும் குழப்பம்

மோடி அறிவிப்பால் பெரும் குழப்பம்

1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பால் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். இது தேவையில்லாத வேலை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

எமர்ஜென்ஸியை மிஞ்சிய சர்வாதிகாரம்

எமர்ஜென்ஸியை மிஞ்சிய சர்வாதிகாரம்

பலரும் எமர்ஜென்ஸியை விட மோசமான சர்வாதிகாரம் இந்த அறிவிப்பு என்று விமர்சிக்கின்றனர். பணக்காரர்களை விட சாதாரண மக்களையே இது கடுமையாக பாதிக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

பணம் இருப்பு வைத்திருப்போர் பெரும் பாடு

பணம் இருப்பு வைத்திருப்போர் பெரும் பாடு

பெரும்பாலான வீடுகளில் குறிப்பாக முதியோர்கள் தங்களது மருத்துவம் உள்ளிட்ட அவசர செலவுகளுக்காக சில ஆயிரம் வரை வைத்திருப்பார்கள். இப்போது இதை மாற்ற அவர்கள் வங்கிகளுக்கு அலைய வேண்டியிருக்கும். அவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலையே இது தரும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொத்துக்களைப் பறிமுதல் செய்வாரா மோடி

சொத்துக்களைப் பறிமுதல் செய்வாரா மோடி

அப்பாவி மக்களைப் பாதிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கோடீஸ்வரர்கள், நிறுவன அதிபர்கள் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களையும் மீட்பாரா என்று பலர் கேட்டுள்ளனர்.

அப்ப எதுக்கு 2000 நோட்டு

அப்ப எதுக்கு 2000 நோட்டு

1000 ரூபாய் நோட்டை ஒழிக்கும் நடவடிக்கை சரி. பிறகு எதற்காக ரூ. 2000 நோட்டு. இது முரண்பாடாக இருக்கிறதே என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ரூ. 100 கள்ள நோட்டு பெருகாதா

ரூ. 100 கள்ள நோட்டு பெருகாதா

கள்ள நோட்டுக்காரர்களுக்கு இனி வேலை வேறு மாதிரியாக இருக்கும். அதாவது இனிமேல் ரூ. 100க்குதான் அதிக மரியாதை இருக்கும். எனவே அந்த நோட்டை இனி அதிக அளவில் அவர்கள் அடிப்பார்கள் என்றும் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

English summary
Social media has erupted against Prime Minister Modi's announcement on the Rs 500 and 1000 currencies ban tonight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X