For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரியலூர் "டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்ஸு"க்கு இன்று பிறந்தநாள்: குவியும் வாழ்த்துகள் #HBDAnitha

அரியலூர் மாணவி அனிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அரியலூர் மாணவி அனிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அரியலூரை சேர்ந்த அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் கடந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் அனிதாவால் சோபிக்க முடியவில்லை.

இதனால் அனிதாவின் மருத்துவர் கனவு கானல் நீராகி போனதை எண்ணி அந்த ஏழை மனம் விம்மியது. எனினும் துக்கம் தாளாமல் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மருத்துவர் கனவோடு மறைந்த அனிதாவுக்கு சமூகவலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் அதை பெறுவதற்குத்தான் அவர் இல்லை.

சாந்தியடைய பிரார்த்தனை

சாந்தியடைய பிரார்த்தனை

எம் ஜி ஆர் ஜெஜெ திமுக பொதுச்செயலாளர் க. மாதவனும் அவரது நினைவு வாழ்த்தில், "நீட் தேர்வினால் நம் எல்லோரையும் விட்டுப் பிரிந்து சென்ற சகோதரி அனிதாவின் பிறந்தநாள் இன்று. நீட் தேர்வு என்ற ஒன்று இல்லாதிருந்தால், மருத்துவ கல்லூரியின் மாணவியாக மட்டுமல்லாமல் நம் அனைவரின் அன்புச் சகோதரியாகவும் இன்று அவர் உயிரோடிருந்திருப்பார். நம் சகோதரியின் உயிரை மாய்த்த நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு நிரந்தர முடிவு எட்டாத நிலையில், அதற்காக குரல் கொடுத்தவர்கள் ஒருசிலர் இன்றும் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் என் கழகத் தொண்டர்களும் நானும் பங்கு வகிக்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அனிதாவின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

புதைத்தோம் உன்னை

இதுகுறித்து ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் விதைக்கும் முன்னே
புதைத்தோம் உன்னை...
இன்று உனக்கு பிறந்த நாளாம், எப்படி வாழ்த்துவது மகளே? என்று கேட்டுள்ளார்.

மதிப்பெண்

மருத்துவம் சேர இந்த மதிப்பெண்ணிற்கு தகுதி இல்லையென்றால் எதற்கு இந்த தேர்வு...!?
மதிப்பெண்...!?

எரித்தே அது அடங்கும்

தமிழகத்தின் ஏதோ ஒரு மருத்துவக் கல்லூரியில் தங்கை அனிதா இன்று தன் சக மருத்துவ மாணவர்களோடு தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்திருப்பாள். தீயில் அவளை வைத்து விட்டு நிற்கிறது தமிழகம். அவளை எரித்த தீயின் மிச்சம் தமிழர்கள் நெஞ்சத்தில் இன்னும் இருக்கிறது.

எங்கள் மனங்களில்

உயிர்நீத்த போராளி மருத்துவர் அனிதா பிறந்த தினம் இன்று.!
மரணித்துவிடவில்லை எங்கள் மனங்களில்.!

English summary
Ariyalur Anitha who commits suicide for not getting Medical seat because of Neet Exam though she gets good marks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X