For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி

குன்னூர் அருகே கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தடுப்புச்சுவர் அமைக்க குழி தோண்டிய போது விபத்து நேரிட்டது.

Google Oneindia Tamil News

குன்னூர்: அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்த விழுந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குன்னூரை அடுத்த மேல்கரன்சி என்னுமிடத்தில் கூலித் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தடுப்புச்சுவர் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Soil collapsed in Coonoor: 4 workers died!

4 தொழிலாளர்கள் குழிக்குள் நின்றுக்கொண்டு மண்ணை வெளியேற்றும பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏதிர்பாராதவிமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இதில் 4 கூலித் தொழிலாளர்களும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மண்ணில் புதைந்திருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோசதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் 4 பேர் மண்ணில் புதைந்த பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
workers involved in the process of forming the barrier wall near Coonoor. The soil collapsed Unexpectedly and fell on the workers. 4 people were died on the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X