For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.டி. வளர்ச்சியால் எழுத்தும், பேச்சும் போச்சுய்யா, வெறும் தனிமை தான்யா இருக்கு: சாலமன் பாப்பையா

By Siva
Google Oneindia Tamil News

ஈரோடு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களிடம் தனிமை அதிகரித்துள்ளதாக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

ஈரோடு புத்தக திருவிழாவில் கணினித் துறை வளர்ச்சியால் நிகழ்ந்துள்ள சமூக மாற்றம் வருந்ததக்கதா, வரவேற்கத்தக்கதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றத்திற்கு சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.

பட்டிமன்றத்தில் பாப்பையா கூறுகையில்,

போராட்டம்

போராட்டம்

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் வந்தபோது அதை எதிர்த்து கையெழுத்து போராட்டம் நடந்தது. ஆனால் இன்றோ லேப்டாப் கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்

மிக்ஸி, கிரைண்டர் வருகையால் அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதே போன்று கம்ப்யூட்டர் வந்தபிறகு பேப்பர் பயன்பாடு குறைந்துள்ளது.

குண்டு

குண்டு

கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த சேவைகள் இல்லாமல் மனிதர்களால் இருக்க முடியாது. ஏன் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது குண்டு வீசக் கூட கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அவலமும் உள்ளது.

குடும்பம்

குடும்பம்

இனி கூடி மகிழ்வது குடும்பங்களில் நடக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மொழி, பண்பாட்டுக்கு மிகப்பெரிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கை

வாழ்க்கை

பழையன கழிதலும், புதியன புகுதலும் தவிர்க்க முடியாதது தான் என்றாலும் அது மனித வாழ்க்கையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

தனிமை

தனிமை

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எழுத்தும், பேச்சும் குறைந்து மனிதர்களிடம் தனிமை தான் அதிகரித்துள்ளது. இதயமும் இதயமும் பேசினால் தான் இன்பம் பெருகும் என்பதை யாரும் மறக்கக் கூடாது என்றார் பாப்பையா.

English summary
Pattimandram fame Solomon Pappaiah told that loneliness has increased as a result of development in the IT field.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X