For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் சில இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில், இன்றில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு கேரளா, கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், வால்பாறை, நீலகிரி, தேனீ, கன்னியாகுமரி, திருநெல்வேலி முக்கிய பகுதிகளில் மழை பெய்யும்.

Some part Tamilnadu may hit with Heavy rain says Tamil Nadu Weatherman

மகாராஷ்டிரா தொடங்கி கன்னியகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி வரை மழை பெய்யும். குடகு, சிக்மங்களூர், ஹாசன் உள்ளிட்ட கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும். கேரளாவின் வயநாட்டிலும் மழை பெய்யும்.

தமிழகத்தில் வால்பாறை, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லையில் மழை பெய்யும். இதனால் மூணார், குடகு போன்ற மலை பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஊட்டி,கொடைக்கானலில் பெரிய பிரச்சனை இருக்காது.

ஆனால் கேரளாவில் இனியும் மழை தொடரும். வெள்ளத்திற்கு இடையிலும் மழை பெய்யும். மேட்டூர் அணைக்கு இன்னும் நீர் வர வாய்ப்புள்ளது. பவானி சாகர் அணை நிரம்பும். அதேபோல் பெரியார், பாபநாசம் அணையும் நிரம்ப வாய்ப்புள்ளது, என்றுள்ளார்.

English summary
Some part Tamilnadu may hit with Heavy rain says Tamil Nadu Weatherman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X