For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலாதேவியை பலிகடாவாக்கி அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களை காப்பாற்ற சதி: ராமதாஸ்

பேராசிரியை நிர்மலாதேவியை பலிகடாவாக்கி அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களை காப்பாற்ற சதி நடப்பதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்..பாமக சார்பில் போராட்டம்-வீடியோ

    சென்னை : கல்லூரி மாணவிகளிடம் பேசி, தவறான வழிக்கு அழைப்பு விடுத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியை மட்டும் பலிகடாவாக்கி, அதிகார உச்சத்தில் இருக்கும் சில பெரிய மனிதர்களை காப்பாற்ற சதி நடப்பதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய ஆடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கல்வி கற்பதற்காக வந்த மாணவிகளை காமத்திற்காக பயன்படுத்திக் கொள்ள துடித்த காட்டுமிராண்டிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுநர் தலையீடு தவறு

    ஆளுநர் தலையீடு தவறு

    மேலும் அந்த அறிக்கையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக சில மாணவிகளுக்கு வலைவீசப்பட்டது தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுனர் பன்வரிலால் புரோகித் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பும், அதில் அவர் அளித்த விளக்கங்களும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு மாறாக அதிகரித்துள்ளன. எந்த வகையிலும் அதிகாரமற்ற வி‌ஷயத்தில் ஆளுனர் தலையிடுவது கண்டிக்கத்தக்கது.

    ஆளுநரின் நாடகம்

    ஆளுநரின் நாடகம்

    நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட வினாவை எளிதாக கடந்து போயிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல்,‘‘எனக்கு 78 வயதாகி விட்டது. எனக்கு பேரன்-பேத்திகள் மட்டுமின்றி, கொள்ளுப் பேரன்களும் உள்ளனர்'' என்று பதிலளித்து சுயபச்சாதாபம் தேடும் முயற்சியில் ஆளுனர் ஈடுபட்டது, எதற்காக இந்த நாடகம்? என்ற ஐயத்தை தான் அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் போராட்டங்கள்

    தமிழகத்தில் போராட்டங்கள்

    தமிழ்நாடு ஏராளமான பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகிறது. பெரும்பான்மை வலிமை இல்லாத அரசு ஆட்சியில் தொடர்கிறது; பினாமி அரசு மீது 24 ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய 206 பக்கங்கள் கொண்ட புகார் பட்டியலை கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி பா.ம.க. வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது; காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகங்களைக் கண்டித்து வரலாறு காணாத போராட்டங்களை தமிழகம் எதிர்கொண்டு வருகிறது.

    மன்னிக்க முடியாத குற்றம்

    மன்னிக்க முடியாத குற்றம்

    இதுகுறித்தெல்லாம் விளக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாத ஆளுனர், மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பெரிய மனிதர்கள் யார்? என்ற சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளிக்க வேண்டிய தேவை என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இது பல்கலைக்கழகம் சார்ந்த வி‌ஷயமல்ல. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 4 மாணவிகளை அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள சிலருக்கு பலியாக்க முயன்ற, மன்னிக்கவே முடியாத குற்றம் சார்ந்த வி‌ஷயமாகும்.

    பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டு

    பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டு

    இது ஒரு தனியார் தன்னாட்சி கல்லூரியின் மாணவிகளை சீரழிக்க அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நடத்திய நாடகம். இதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகளில் தலையிட பல்கலைக்கழக துணைவேந்தருக்கோ, வேந்தரான ஆளுனருக்கோ எந்த அதிகாரமும் இல்லை. புலனாய்வு அமைப்புகள் தான் இக் குற்றத்தை விசாரிக்க முடியும். இதன் பின்னணியில் பல் கலைக்கழகம் தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது. அந்த வகையில் பல்கலைக் கழக உயரதிகாரிகள், துணை வேந்தர், வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுனர் ஆகியோர் தான் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும்.

    நியாயமான விசாரணை

    நியாயமான விசாரணை

    ஆனால், காமராசர் பல்கலைக் கழக வேந்தர் பன்வரிலால் புரோகித், துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா ஆகியோர் நீதிபதிகளாக செயல்பட்டு விசாரணைக்கு ஆணையிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது சட்டத்தையும், நீதியையும் கொச்சைப்படுத்தும் செயலாகவே அமையும். கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடமிருந்து 3 செல்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பல்வேறு பெரிய மனிதர்களை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும், 60க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள்

    குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள்

    இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல பெரிய மனிதர்களின் பெயர்களை பட்டியலிட்ட நிர்மலா தேவி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு துணிச்சல் உண்டா? என்று சவால் விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து தான் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். இது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியே தவிர, அவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல.

    நிர்மலா தேவி மீது பழி

    நிர்மலா தேவி மீது பழி

    இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் துணை வேந்தர் முதல் ஆளுனர் வரை அனைவருமே, இந்த அவலச் செயலை நிர்மலாதேவி மட்டுமே செய்ததாகவும், அதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என்பது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இது உண்மை அல்ல. காமராசர் பல்கலைக் கழகத்தின் உயர்பதவியில் உள்ள ஒருவர் இந்த வி‌ஷயத்தில் மோசமானவர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்களே குற்றச்சாட்டுகின்றனர்.

    காட்டுமிராண்டிகளுக்கு தண்டனை

    காட்டுமிராண்டிகளுக்கு தண்டனை

    உண்மை அவ்வாறு இருக்கும்போது நிர்மலா தேவியை பலிகடாவாக்கி விட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றும் சதி தான் இதுவாகும். இந்த சதித் திட்டத்தில் நிர்மலாதேவியின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். கல்வி கற்பதற்காக வந்த மாணவிகளை காமத்திற்காக பயன்படுத்திக் கொள்ள துடித்த காட்டுமிராண்டிகள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் தப்ப விடக் கூடாது.

    அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது

    அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது

    இவ்வி‌ஷயத்தில் தம் மீது தவறு இல்லையெனில் அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தான் ஆளுனர் ஈடுபட வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஒரு போதும் ஈடுபடக்கூடாது. இந்த வழக்கில் பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் எந்த வகையிலும் தலையிடக்கூடாது. மாறாக இந்த வழக்கை சி.பி.ஐ. விசா ரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும் என்று அந்த ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Some people making Nirmala Devi as Scapegoat says Ramadoss. PMK Founder Ramadoss says that, Fair investigation is needed on Professor Sexual Trafficking Complaint .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X