For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3ம் பருவ கட்டணத்தை ரொக்கமாக கட்டுங்க.. பள்ளிகளில் புது நெருக்கடி.. பெற்றோர்கள் தவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 3ம் பருவ கல்விக் கட்டணத்தை காசோலையாக அல்லது டிடியாக கொடுக்கக் கூடாது, ரொக்கமாகத்தான் கட்ட வேண்டும் என்று பெற்றோர்களை பள்ளி நிர்வாகங்கள் நிர்ப்பந்திப்பதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.

அப்படிக் கட்டாவிட்டால் மாணவர்களுக்கு புத்தகம் தருவதை நிறுத்துவதாகவும், வகுப்புகளுக்கு வரக் கூடாது என்று கட்டாயப்படுத்துவதாகவும், வகுப்புகளுக்கு வெளியே நிற்க வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

தற்போது பண ஒழிப்பு விவகாரத்தின் எதிரொலியாக மக்களிடம் கையில் காசு இருப்பதே பெரிய விஷயமாகி விட்டது. பணத்தை வங்கியிலிருந்து எடுக்கவும் முடியாமல், எடுத்தாலும் 2000 ரூபாய் நோட்டாக மட்டுமே வருவதாலும் ஏற்கனவே பிரச்சினை இருக்கும் நிலையில் தற்போது பள்ளிகளின் அடம் பெற்றோர்களை சிரமத்தில் தள்ளியுள்ளது.

3ம் பருவ கல்விக் கட்டணம்

3ம் பருவ கல்விக் கட்டணம்

அரையாண்டு தேர்வு முடிந்து தற்போது 3வது பருவம் தொடங்கி விட்டது. பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் பெற்றோர்களுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது, கல்விக் கட்டணம் ரூபத்தில்.

ரொக்கமாக கட்டுங்க

ரொக்கமாக கட்டுங்க

தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு பருவத்திற்கும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக் கட்டுவதில்தான் தற்போது சிக்கல் வந்துள்ளது. பண ஒழிப்பைத் தொடர்ந்து மக்களிடம் கையில் ரொக்கமாக பெருமளவில் பணம் இல்லை. அன்றாட செலவுக்கே மக்கள் திணறித் திணறித்தான் சமாளித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பள்ளிகளில் 3ம் பருவ கட்டணத்தை ரொக்கமாக கட்டுமாறு வலியுறுத்துகிறார்களாம்.

காசோலை கூடாது

காசோலை கூடாது

பெரும்பாலான பள்ளிகளில் ரொக்கமாக கட்டுமாறும், காசோலை அல்லது டிடி தரக் கூடாது என்று வலியுறுத்துகிறார்களாம். கட்ட முடியாதவர்களின் பிள்ளைகளுக்கு புத்தகம் தருவதை நிறுத்தி வைக்கிறார்களாம். மேலும் வகுப்புகளுக்கு அவர்கள் வருவதைத் தடுத்தும், மீறி வந்தால் வகுப்புகளுக்கு வெளியே நிற்க வைத்து தண்டனை தருவதும் நடப்பதாக பெற்றோர்கள் குமுறுகிறார்கள்.

பாதி காசு.. பாதி காசோலை

பாதி காசு.. பாதி காசோலை

சில பள்ளிகளில் பாதிப் பணத்தை ரொக்கமாக கட்டுமாறும், குறைந்த பட்ச தொகையை மட்டும் காசோலையாக தருமாறும் கூறுவதாக சொல்கிறார்கள். இதில் ரொக்கமாக கட்டுவது "கறுப்பு" என்றும் காசோலையாக தருவதுதான் அரசு நிர்ணயித்த தொகை என்றும் பெற்றோர்கள் குமுறுகின்றனர்.

அரசு தலையிடுமா

அரசு தலையிடுமா

தனியார் பள்ளிகள் சில இப்படி முரண்டு பிடிப்பதால் பணத்தை எங்கே போய் எடுப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்களில் அதிகபட்சம் 4500 மட்டுமே எடுக்க முடியும். ஆனால் அதை எடுப்பதிலும் பலசிக்கல்கள் உள்ளன. செக் போட்டு எடுத்தாலும் 24,000 மட்டுமே ஒரு வாரத்துக்கு எடுக்க முடியும். எனவே அதிலும் செயல்முறைச் சிக்கல்கள் உள்ளன என்று பெற்றோர்கள் புலம்புகின்றனர்.

அரசு தலையிட்டு உரிய உத்தரவை கண்டிப்புடன் பிறப்பித்தால் நல்லது என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
Some private Schools in Tamil Nadu are refusing 3rd trimester fees in Cheques. They demand the parents to pay the fees in cash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X