For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படார்னு திறந்த கதவு... "சொன்னது நீதானா.. சொல் சொல்".. பதறி போன எம்.எஸ்.வி!!

சொன்னது நீதான பாடல் எப்படி உருவானது தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: எத்தனையோ முறை கவிஞரின் எவ்வளவோ இனிமையான பாடல்களை கேட்டிருக்கிறோம். ஆனால் அந்த பாடல்கள் எவ்வாறு உருவானது என்று தெரிந்தால் அதைவிட கூடுதல் சுவையே. அப்படி ஒரு பாடல் பிறந்த கதைதான் இது.

பாண்டிச்சேரியில் எம்எஸ்.வி.-கவிஞருடன் நடந்த கலகலப்பான கம்போசிங் குறித்த ஒரு சுவாரஸ்ய பதிவு.

Sonnadhu Nee Thaanaa? create the song situation of Kannadhasan

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் புகழின் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் அது. ரொம்ப பிசி. கைவசம் நிறைய படங்கள். ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் 2-நாள் பாண்டிச்சேரி சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது. பாண்டிச்சேரி வந்த முதல்நாள் முழுவதும் கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். கண்ணதாசன் தூங்கும்போது யாராவது எழுப்பினால் கோபம் வந்துவிடுவாம். இதனால் அன்றைய நாள் முழுதும் எந்த கம்போசிங்கும் நடக்கவில்லை.

மறுநாள் காலையும் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். இதனால் எம்.எஸ்வி. டென்ஷன் ஆகிவிட்டார். கண்ணதாசனின் அறைக்கதவு முன்பு நின்று கொண்டு, யாராவது போய் கவிஞரை எழுப்பிவிட போறீங்களா? இல்லையா? இல்லேன்னா நான் கிளம்பி ஊருக்கு போயிடுவேன்" என்று அங்கிருந்த படக்குழுவினரிடம் சத்தம் போட்டிருக்கிறார்.

படக் கென்று கண்ணதாசனின் அறை கதவு திறந்தது. எல்லோரும் பயந்தே போய்விட்டார்கள். எம்எஸ்வி பேசியது எப்படியோ கேட்காமல் இருந்திருக்காது என்று. கவிஞர் வெளியே வந்தார். எம்எஸ்வியிடம்... "சொன்னது நீதானா"... என்றார். எம்எஸ்வியோ ஒரு கணம் பதறிட்டார். ஐயோ..நான் இல்ல... அது வந்து.. என்று திணறினார். ஆனால் கவிஞரோ, எம்எஸ்வியை உற்றுபார்த்துவிட்டு "இல்லை... சொன்னது நீதானா? சொல்.. சொல்.. சொல்.. என் உயிரே" என்று சொல்லி, இதை கம்போஸ் செய், இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனாராம். இப்படித்தான் அந்த பாடல் பிறந்தது.

என்ன மாதிரியான கவிஞரய்யா இவர்.. நிறைய மிஸ் செய்கிறோம் கவிஞரை உங்களை!

English summary
Kannadasan is a famous Tamil film songwriter and poet. More than 4,000 poems, over five thousand film songs, novels, and articles. He was the poet of the state government of Tamil Nadu. Sahitya Akademi Award winner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X