For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாமரைக்கனி மகனும், கேகேஎஸ்எஸ்ஆர் மகனும்.. அப்பாக்களைக் கலவரப்படுத்திய பிள்ளைகள்... ஒரு பிளாஷ்பேக்!

Google Oneindia Tamil News

சென்னை: நமது தலைமுறையில், விருதுநகர் மாவட்ட அரசியலில் முக்கியமானவர்கள் தாமரைக்கனியும், சாத்தூர் ராமச்சந்திரனும். இருவரும் ஒரு கட்சியில் இருந்தவர்கள்.. ஆனால் புலியும், எலியுமாக மோதி வந்தவர்கள். உச்சகட்டமாக ராமச்சந்திரன் முகத்தை ஆசிட் வீசி சிதைத்தவர் தாமரைக்கனி. ஆனால் இன்று இருவருக்கும் ஒரு ஒற்றுமை கிடைத்துள்ளது.

தாமரைக்கனி தனது கடைசி காலத்தால் தனது மகன் இன்பத் தமிழனால் பெரும் சோதனைகளைச் சந்தித்தார். அதேபோல இப்போது ராமச்சந்திரனும் தனது இளைய மகன் ரமேஷால் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளார். தாமரைக்கனியும், ராமச்சந்திரனும் எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளைகளாக வலம் வந்தவர்கள். ஆனால் கடுமையாக மோதிக் கொண்டவர்களும் கூட.

சட்டசபையில் வைத்தே ராமச்சந்திரனுடன் மோதியவர் தாமரைக்கனி. உச்சகட்டமாக ராமச்சந்திரன் முகத்தில் தாமரைக்கனி ஆசிட் ஊற்றியது அப்போது பெரும் பரபரப்பான சம்பவமாக இருந்தது.

அதிமுக - திமுக

அதிமுக - திமுக

தாமரைக்கனி அதிமுகவில் தீவிரமாக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் தனியாக செயல்பட்டார். பின்னர் ஜெயலலிதா தலைமையை ஏற்றார். பின்னர் அதிலிருந்தும் விலகி திமுகவுக்குப் போனார். அதேபோலத்தான் ராமச்சந்திரனும். இவரும் அதிமுக, ஜெயலலிதா, திமுக என பாதை மாறியவர்.

இன்பத் தமிழன்

இன்பத் தமிழன்

தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழன். தாமரைக்கனியின் வாரிசான இவர் தனது தந்தையை மீறிச் செயல்பட்டவர் ஆவார். ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்று அதிமுகவில் அமைச்சர் அளவுக்கு உயர்ந்தவர். ஆனால் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. இன்பத் தமிழனுக்கும், தாமரைக்கனிக்கும் அப்படி ஒரு சண்டை நடந்தது அப்போது. கடைசி வரை இருவருமே சமாதானம் ஆகவில்லை. 2005ம் ஆண்டு மறைந்தார் தாமரைக்கனி.

ராமச்சந்திரன் மகன் ரமேஷ்

ராமச்சந்திரன் மகன் ரமேஷ்

இந்த நிலையில் தாமரைக்கனி மகன் போலவே தனது தந்தையுடன் மோதி விட்டு அதிமுகவுக்குப் போயுள்ளார் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ். இவருக்கும் இன்பத் தமிழன் போல எம்.எல்.ஏ.,அமைச்சர் பதவிகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜொலிப்பாரா அல்லது இருக்கும் இடம் இல்லாமல் போவாரா?

ஜொலிப்பாரா அல்லது இருக்கும் இடம் இல்லாமல் போவாரா?

ரமேஷ் அதிமுகவில் ஜொலிப்பாரா அல்லது இன்பத் தமிழன் போல இருக்கும் இடம் இல்லாமல் போவாரா என்றும் விருதுநகரில் இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர். இருப்பினும் எப்படி இன்பத் தமிழனை வைத்து தாமரைக்கனிக்கு அதிமுக குடைச்சல் கொடுத்ததோ அதேபோல ரமேஷை வைத்து ராமச்சந்திரனை அதிமுக உரசிப் பார்க்கும் என்கிறார்கள்.

பார்க்கலாம்..!

English summary
Both the late leader Tamaraikani and KKSSR Ramachandran have been tasted the bitter pill by their sons. Tamaraikani's son Inbatamilan was once pitted against his father by Jayalalitha. Now, Ramachandran's son Ramesh has joined in ADMK against the wish of his father.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X