For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் எடப்பாடி அரசு வீட்டுக்கு போகும்.. தினகரன் ஆட்சி அமைப்பார்: புகழேந்தி ஆருடம்

விரைவில் எடப்பாடி அரசு வீட்டுக்கு போகும்.. தினகரன் ஆட்சி அமைப்பார் என்று புகழேந்தி குறிப்பிட்டு உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

திருவாரூர் : விரைவில் எடப்பாடி அரசு வீட்டுக்கு போகும், தமிழ்நாட்டில் டி.டி.வி தினகரன் ஆட்சி அமைப்பார் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குறிப்பிட்டு உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் டி.டி.வி தினகரன் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசினார்.

Soon Edappadi Government will be sent to Home, Pugazhendhi

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் தெரிந்தே நிற்கவில்லை என்றால் அது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கும், ஆண்டாள் பற்றிய விமர்சனத்துக்கும் டி.டி.வி.தினகரன் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வின் மூலம் ஆளும் கட்சியினர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளனர். பேருந்து கட்டணம் என்பது மக்களை சுரண்டுவதற்காகவே உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

தொடர்ந்து மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருவதன் மூலம், விரைவில் எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்லப் போகிறது. தனிக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க. தான் எப்போதும் எங்களது கட்சி. தற்போது கட்சியை வழிநடத்துபவர் சசிகலா தான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவு அளித்த 11 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் சட்டசபைக்கு வருவார்கள். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ. ஆனவர்கள் அனைவரின் ஆதரவுடன் விரைவில் டி.டி.வி தினகரன் ஆட்சி அமைப்பார் என்று புகழேந்தி தெரிவித்து உள்ளார்.

English summary
Soon Edappadi Government will be sent to Home, said TTV Dhinakaran Supporter Pugazhendhi. He also added that those 11 MLAs who supported OPS will also get Disqualified .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X