For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி பாஜகவோடு கூட்டணி சேர்ந்தால் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் கதிதான்... நாஞ்சில் சம்பத்

ரஜினி பாஜகவோடு கூட்டணி வைத்தால் அவருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி தனி கட்சி தொடங்கமாட்டார்-புகழேந்தி- வீடியோ

    புதுச்சேரி : ரஜினி கட்சி ஆரம்பித்து பாஜகவோடு கூட்டணி வைத்தால் அவருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலை தான் கிடைக்கும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.

    புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:

    ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டு உள்ள ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தாது ஏன்?.

     ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை

    தினகரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன ? இதில் இருந்தே கமிஷன் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

     தனிக்கட்சிக்கு இடமில்லை

    தனிக்கட்சிக்கு இடமில்லை

    அதிமுக என்றுமே எங்கள் கட்சி தான். ஆனால், விரைவில் வரவிருக்கும் தேர்தல்களை சந்திக்க எங்களுக்கு தனி அமைப்பு ஒன்று தேவை என்கிற அடிப்படையில் தான் டி.டி.வி தினகரன் பேசி உள்ளார். தனிகட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் ஒரு காலத்திலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரையும் ஆதரிக்கமாட்டோம்.

     ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மோதல்

    ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மோதல்

    எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்குத் தான் வெற்றி. அது விரைவில் தீர்ப்பு வரும்போது தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த மோதல் தற்போது அதிகரித்து உள்ளது. விரைவில் அவர்கள் இருவருமே தங்களையே மாற்றி மாற்றி கட்சியில் இருந்து நீக்கிக்கொள்வதாக அறிக்கை வெளியாகும்.

     ஆர்.கே நகர் இடைத்தேர்தல்

    ஆர்.கே நகர் இடைத்தேர்தல்

    பாஜகவோடு யார் கூட்டு சேர்ந்தாலும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவு தான் அவர்களுக்கும் நடக்கும். அது ரஜினியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. அதனால் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.

    English summary
    Soon OPS and EPS will expels themselves from ADMK says TTV Dhinakaran supporter Nanjil Sampath. Earlier Najil Sampath and Pughazhendhi meets Press on Pudhucherry Resort.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X